தங்கம் விலை ஒரே நாளில் சவரனுக்கு ரூ.1,360 அதிகரிப்பு; வெள்ளி விலையும் புதிய உச்சம்
சென்னை: சென்னையில் இன்று (ஜனவரி 19) 22 காரட் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு 1,360 ரூபாய் அதிகரித்து ஒரு சவரன் ஒரு லட்சத்து 7 ஆயிரத்து 600 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. கிராமுக்கு 170 ரூபாய் அதிகரித்து ஒரு கிராம் 13 ஆயிரத்து 450 ரூபாய்க்கு விற்பனை ஆகிறது.
சர்வதேச நிலவரங்களால், நம் நாட்டில் தங்கம், வெள்ளி விலை தொடர்ந்து புதிய உச்சத்தை தொட்டு வருகிறது. கடந்த சனிக்கிழமை (ஜனவரி 17) ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு 400 ரூபாய் அதிகரித்து ஒரு சவரன் ஒரு லட்சத்து 6 ஆயிரத்து 240 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது. கிராமுக்கு 50 ரூபாய் உயர்ந்து ஒரு கிராம் 13 ஆயிரத்து 280 ரூபாய்க்கு விற்பனை ஆனது.
வெள்ளி விலையும் கிராமுக்கு 4 ரூபாய் உயர்ந்து ஒரு கிராம் 310 ரூபாய்க்கும், கிலோவுக்கு 4 ஆயிரம் ரூபாய் உயர்ந்து ஒரு கிலோ 3 லட்சத்து 10 ஆயிரம் ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது.
இந்நிலையில் இன்று (ஜனவரி 19) 22 காரட் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு 1,360 ரூபாய் அதிகரித்து ஒரு சவரன் ஒரு லட்சத்து 7 ஆயிரத்து 600 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. கிராமுக்கு 170 ரூபாய் அதிகரித்து ஒரு கிராம் 13 ஆயிரத்து 450 ரூபாய்க்கு விற்பனை ஆகிறது.
வெள்ளியும் புதிய உச்சம்
வெள்ளி விலையும் கிராமுக்கு 8 ரூபாய் அதிகரித்து ஒரு கிராம் 318 ரூபாய்க்கு விற்பனை ஆகிறது. கிலோவுக்கு 8 ஆயிரம் ரூபாய் அதிகரித்து ஒரு கிலோ 3 லட்சத்து 18 ஆயிரம் ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
கடந்த கால தங்கம் விலை நிலவரங்களை அறிய இங்கே கிளிக் செய்யவும்
இது குறித்தும் பிரதமர் பெருமிதப்படலாமே..
பிரதமர் ஊழல் செய்யாதவர் லஞ்சம் வாங்காதவர் அதனால் உன் வீட்டில் இருக்கும் தங்கம் பத்திரம். கட்டுமர திருட்டு திமுகவினர் ஆட்டையை போட்டுவிடுவார்கள்
தங்கத்தின் மீதுள்ள ஆசை, இல்லை பேராசை ஒழிய வேண்டும்
போட்டோவில் தங்கத்தை பார்த்து ஆசையாக சிரிக்கும் பெண்மணிகளே, உங்களிடம் இருக்கும் தங்கத்தை பார்த்து பத்திரமாக வைத்துக்கொள்ளவும். இல்லனா கட்டுமர திருட்டு திமுகவினர் உங்களுக்கு தெரியாமல் நீங்கள் எங்குமே நிருபிக்க முடியாதபடி ஆட்டையை போட்டுவிடுவார்கள்.
உச்சத்திலேயே இருக்க வேண்டியதுதான் தங்கம் விலை என்றும் குறையாதுமேலும்
-
மின்னணு பொருட்கள் ஏற்றுமதியில் சாதனை: அஸ்வினி வைஷ்ணவ் மகிழ்ச்சி
-
இந்தியாவை மட்டும் விமர்சிப்பது நியாயமற்றது: மத்திய வெளியுறவு அமைச்சர்
-
மத்திய அமைச்சர் அமித் ஷா குறித்து அவதூறு; நீதிமன்ற சம்மனை புறக்கணித்த ராகுல்
-
ஜம்முகாஷ்மீர் லே லடாக் பகுதியில் திடீர் நிலநடுக்கம்; வீடுகளில் இருந்து பீதியில் ஓடிய மக்கள்
-
ஜம்மு காஷ்மீரில் பாதுகாப்பு படையினர் மீது பயங்கரவாதிகள் துப்பாக்கிச்சூடு; ராணுவ வீரர் வீர மரணம்
-
எந்த முகத்தை வைத்துக்கொண்டு புறப்பட்டீர்கள்; திமுகவுக்கு அண்ணாமலை காட்டமான கேள்வி