துணை அஞ்சல் அலுவலகம் திறப்பு

கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சியில் புதிய துணை அஞ்சல் அலுவலகம் திறப்பு விழா நடக்கிறது.

விருத்தாச்சலம் அஞ்சல் கோட்ட கண்காணிப்பாளர் ஜெயசீலன் செய்திக்குறிப்பு :

கள்ளக்குறிச்சி அருகே பெருவங்கூர் சாலையில் உள்ள ஏ.கே.டி., நகரில், வரும் 22ம் தேதி கள்ளக்குறிச்சி கிழக்கு துணை அஞ்சல் அலுவலகம் திறப்பு விழாவும், அஞ்சல் சமூக வளர்ச்சி விழாவும் நடைபெற உள்ளது.

திறப்பு விழாவில், மத்திய மண்டல அஞ்சல் துறை தலைவர் நிர்மலாதேவி பங்கேற்று சேவையை துவக்கிவைத்துப் பேசினார்.

மேலும், புதிய அஞ்சலக கணக்கு துவங்குதல், ஆதார் சிறப்பு முகாம், அஞ்சல் ஆயுள் காப்பீடு சிறப்பு முகாம், அஞ்சல் சிறுசேமிப்பு முகாம், செல்வமகள் சேமிப்பு திட்டம், தங்க மகன் திட்டம் உள்ளிட்ட சேவைகள் வழங்கப்படுகிறது.

7திறப்பு விழாவில் பொதுமக்கள் பங்கேற்று ஆதார் சேவை மற்றும் அஞ்சல் சேவை தொடர்பான அனைத்து தகவல்கள் மற்றும் சந்தேகங்களை கேட்டறியலாம்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Advertisement