அமெரிக்க வர்த்தகம் குறைந்தாலும் இந்திய ஆடை ஏற்றுமதி அதிகரிப்பு டிசம்பரில் 2.90 சதவீதம் வளர்ச்சி
திருப்பூர்: அமெரிக்க வர்த்தக வாய்ப்பு குறைந்த போதிலும், சர்வதேச அளவில் கடந்த டிசம்பரில், 13,550 கோடி ரூபாய்க்கு, ஆயத்த ஆடை ஏற்றுமதி நடந்துள்ளது.
ஆடை ஏற்றுமதி வர்த்தகத்தில், உலகளாவிய சவால்கள் அதிகரித்துள்ளன. கடந்த நான்கு மாதங்களாக, இந்தியாவுக்கான ஆர்டர் வரத்து மந்தமாகியுள்ளது. இருப்பினும், மாதாந்திர ஆடை ஏற்றுமதி வர்த்தகம், பாதிப்பின்றி மிதமான வளர்ச்சி யுடன் சென்று கொண்டிருக்கிறது.
கடந்த டிச., மாதத்தில், 13,550 கோடி ரூபாய் மதிப்பிலான ஆடை ஏற்றுமதி நடந்துள்ளது. 2024 டிச., மாதம், 12,427 கோடி ரூபாயாக இருந்தது. முந்தைய ஆண்டுடன் ஒப்பிடுகையில் இது 9.07 சதவீதம் அதிகம். அமெரிக்க டாலர் மதிப்பில், 2.90 சதவீதம் உயர்வாகும்.
கடந்த நிதியாண்டின் ஏப்., முதல் டிச., வரையிலான, ஒன்பது மாதங்களில், 94,940 கோடி ரூபாய் மதிப்பிலான ஆடை ஏற்றுமதி நடந்துள்ளது. நடப்பு நிதியாண்டின், முதல் ஒன்பது மாத ஏற்றுமதி, ஒரு லட்சம் கோடி ரூபாயை தாண்டியுள்ளது. இது 6.50 சதவீதம் அதிகம்.
ஆயத்த ஆடை ஏற்றுமதி மேம்பாட்டு கவுன்சில் (ஏ.இ.பி.சி.,) தலைவர் சக்திவேல் கூறுகையில், ''கடந்த நிதியாண்டுடன் ஒப்பிடுகையில், ஏப். முதல் அக். வரையிலான, ஏழு மாத அமெரிக்காவுக்கான ஏற்றுமதி, முந்தைய ஆண்டை காட்டிலும், 1.60 சதவீதம் மட்டுமே குறைந்துள்ளது.
இறக்குமதி வரி விதிப்பால் வர்த்தக பாதிப்பு இருந்தாலும், ஆயத்த ஆடை ஏற்றுமதியில், மிதமான வளர்ச்சி சாதகமாக இருக்கிறது'' என்றார்.
ஆடை ஏற்றுமதி (ரூபாய்/கோடியில்): 2024 டிச.: 2025 டிச.: 2024 ஏப்.: 2025 ஏப்.:
மேலும்
-
இன்று இனிதாக...
-
லக்குண்டி கிராமத்தில் 2வது நாளாக அகழ்வாராய்ச்சி கல் கண்டுபிடிப்பு
-
3வது மாடியில் இருந்து குதித்து பெண் தற்கொலை
-
கிரேட்டர் பெங்களூரு ஒருங்கிணைந்த புறநகர் திட்டத்திற்கு நிலம் கையகப்படுத்துவதை எதிர்த்து விவசாயிகள் ஆர்ப்பாட்டம்
-
தங்கவயலில் எம்.ஜி.ஆர்., பிறந்த நாள் விழா
-
பகீர்! 'சட்டவிரோதமாக பெங்களூரு வருகின்றனர் வங்கதேசத்தினர்' மேல்சபை எதிர்க்கட்சி தலைவர் சலவாதி நாராயணசாமி கவலை