லக்குண்டி கிராமத்தில் 2வது நாளாக அகழ்வாராய்ச்சி கல் கண்டுபிடிப்பு
கதக்: கதக் மாவட்டம் லக்குண்டி கிராமத்தில், 2வது நாளாக நடந்த அகழ்வாராய்ச்சியில், கல் ஒன்று கண்டுபி டிக்கப்பட்டது.
கதக் மாவட்டம் லக்குண்டி கிராமத்தில், புகழ்பெற்ற வீரபத்ரேஸ்வரர் கோவிலுக்கு அருகே, சில நாட்களுக்கு முன் வீடு கட்டுவதற்கு பள்ளம் தோண்டிய போது, செம்பு பாத்திரம் கண்டுபிடிக்கப்பட்டது. அதில், 475 கிராம் தங்க நகைகள் இருந்தன. இதையடுத்து, நேற்று முன்தினம் வீரபத்ரேஸ்வரர் கோவில் வளாகத்தில் அகழ்வாராய்ச்சி பணிகள் துவங்கின.
இதைப்பார்க்க ஏராளமானோர் குவிந்தனர். அவர்கள் தங்கள் மொபைல் போன்களில், அகழாய்வு பணியை படம் பிடித்தனர். இதையடுத்து, பாதுகாப்பு காரணங்களுக்காக அகழ்வாராய்ச்சி பணி நடக்கும் இடத்திற்கு, பொதுமக்கள் செல்ல தடை விதித்து மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது.
தொல்லியல் துறை அதிகாரிகளின் மேற்பார்வையில், நேற்று பணிகள் நடந்தன. இதில், பெரிய கல் ஒன்று கண்டுபிடிக்கப்பட்டது.
இந்த கல் பழங்காலத்தில் நீர் வெளியேறுவதற்கு பயன்படுத்தப்பட்டு இருக்கலாம் என்ற தகவல் வெளியாகி உள்ளது. அதே சமயம், வீரபத்ரேஸ்வரர் கோவில் திருவிழா அடுத்த மாதம் நடைபெற உள்ளது.
இந்த விழாவுக்கு அகழ்வாராய்ச்சி பணிகள் தடையாக இருக்கலாம் என, கிராமத்தினர் கருதுகின்றனர். அகழ்வாராய்ச்சி பணிகளுக்கு மக்கள் எதிர்ப்பு தெரிவித்து உள்ளனர்.
மேலும்
-
வளர்ச்சியில் பின்தங்கிய நிலையில் தமிழகம்: கவர்னர் ரவி
-
கொரிய வீராங்கனை சாம்பியன்: இந்திய ஓபன் பாட்மின்டனில்
-
எல்லைப்பாதுகாப்பில் முன்பைவிட இந்தியாவுக்கு கூடுதல் பலம்; ராஜ்நாத் சிங்
-
ஸ்டாலின் ஆட்சியை ஒழித்து விரைவில் தமிழகம் மீட்டெடுக்கப்படும்; நயினார் நாகேந்திரன்
-
டிரம்ப்புக்கு எதிர்ப்பு: அமெரிக்காவுடன் செய்து கொண்ட வர்த்தக ஒப்பந்தத்தை நிறுத்தியது ஐரோப்பிய யூனியன்
-
ஏழைகளுக்கான திட்டங்களை தடுக்கும் அரசை தண்டிக்க வேண்டும்: பிரதமர் மோடி