3வது மாடியில் இருந்து குதித்து பெண் தற்கொலை
குரோம்பேட்டை: உடல்நலம் பாதிக்கப்பட்ட கணவரை சரிவர கவனிக்க முடியவில்லை என்ற சோகத்தில், 3வது மாடியில் இருந்து குதித்து பெண் தற்கொலை செய்தது, சோகத்தை ஏற்படுத்தியது.
குரோம்பேட்டை, நியூ காலனி 2வது பிரதான சாலையைச் சேர்ந்தவர் ரவி, 58; மத்திய அரசு ஊழியர். இவரது மனைவி சாந்தகுமாரி, 53. இவர்களது மகன் வெளிநாட்டில் பணிபுரிகிறார். ஆஸ்துமா உள்ளிட்ட உடல்நல பாதிப்புகளால் ரவி அவதிப்பட்டு, அடிக்கடி மருத்துவமனைக்கு சென்று வந்துள்ளார்.
சாந்தகுமாரியும் மூட்டு வலி உள்ளிட்ட பாதிப்புகளால் அவதியடைந்து வந்துள்ளார்.
உடல்நலம் பாதிக்கப்பட்ட கணவரை சரிவர கவனிக்க முடியவில்லை என சாந்தகுமாரி, மன வருத்தத்தில் இருந்தாக கூறப்படுகிறது.
இந்த நிலையில், நேற்று முன்தினம் பணி முடிந்து ரவி வீடு திரும்பியபோது, வீட்டில் மனைவி இல்லாததை கண்டு அதிர்ச்சியடைந்தார். அவரை தேடுகையில் 3வது மாடியில் இருந்து குதித்து, தற்கொலை செய்தது தெரிய வந்தது.
மேலும்
-
இன்று தை அமாவாசை; ராமேஸ்வரம் அக்னி தீர்த்தக்கடலில் பக்தர்கள் புனித நீராடி தர்ப்பணம்
-
கறிக்கோழி தொழிலுக்கு சிக்கல் உற்பத்தியாளர்கள் குமுறல்
-
சி.எம்.சி., டாக்டர் வீட்டில் போதை பொருள் பறிமுதல்
-
பழைய ஓய்வூதிய திட்டம் கோரி பிப்., 3 முதல் வேலைநிறுத்தம் 'ஆக்டோ ஜியோ' அறிவிப்பு
-
ஏழைகளின் உழைப்பை சுரண்டும் நவீன தந்திரம்
-
கல்வி நிறுவனங்களில் சமத்துவ குழு ஜாதியை வளர்க்கும் யு.ஜி.சி., உத்தரவு