விடுமுறையில் ஊட்டியில் குவிந்த சுற்றுலா பயணிகள்
ஊட்டி: ஊட்டி சுற்றுலா மையங்களில், தொடர் விடுமுறை காரணமாக, சுற்றுலா பயணிகள் கூட்டம் அதிகரித்து காணப்பட்டது.
ஊட்டி தாவரவியல் பூங்கா, படகு இல்லம், ரோஜா பூங்கா மற்றும் தொட்டபெட்டா சிகரம்உள்ளிட்ட, சுற்றுலா மையங்களில், சாதாரண நாட்களில் கூட பயணிகளின் வருகை அதிகரித்து காணப்படுகிறது.
கடந்த சில நாட்களாக, மழையுடன், குளிரான காலநிலை நிலவியது. இதனால், ஊட்டியில் சுற்றுலா பயணிகளின் வருகை, வெகுவாக குறைந்திருந்தது. இந்நிலையில், நேற்று வெயிலான கால நிலை நிலவியது.
பொங்கல் தொடர் விடுமுறை காரணமாக, நேற்று சுற்றுலா பயணிகள் ஊட்டியில் குவிந்தனர். அரசு தாவரவியல் பூங்கா, ரோஜா பூங்கா மற்றும் கர்நாடகா பூங்கா உள்ளிட்ட முக்கிய சுற்றுலா மையங்களில், பயணிகளின் வருகை அதிகரித்து காணப்பட்டது.
இதமான காலநிலையில், சுற்றுலா பயணிகள் இயற்கை காட்சிகளை கண்டு களித்து குதுாகலம் அடைந்தனர்.