தமிழகத்தில் நடப்பது சர்வாதிகார ஆட்சியா? காடேஸ்வரா சுப்ரமணியம் கேள்வி

சென்னை: தமிழகத்தில் நடப்பது சர்வாதிகார ஆட்சியா? என ஹிந்து முன்னணி தலைவர் காடேஸ்வரா சுப்ரமணியம் கேள்வி எழுப்பி உள்ளார்.



இது குறித்து அவர் கூறியதாவது: தமிழகத்தில் சட்டம் - ஒழுங்கு சீர்குலைந்து, பிரச்னைகள் பெருகும் சூழ்நிலையில், மக்கள் பிரச்னைக்கு குரல் கொடுப்போரை ஒடுக்கும் வகையில், அறவழிப் போராட்டத்தில் ஈடுபடுவோர் மீது பொய் வழக்கு போட்டு, ஆளும் தி.மு.க., அரசு கைது செய்கிறது. விவசாயிகள் பிரச்னைக்காக குரல் கொடுக்கும் தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்க நிறுவனர் ஈசன் முருகசாமியை, பொய் புகாரின் அடிப்படையில் கைது செய்துள்ளது மிகவும் கண்டிக்கத்தக்கது.


மக்கள் பிரச்னைகளுக்காக ஜனநாயக ரீதியில் போராடுவது, அரசியலமைப்பு சட்டம் தந்த அடிப்படை உரிமை. அந்த உரிமையை பறிக்கும் வகையில், போராடுவோரை மிரட்டி ஒடுக்கும் வகையில் கைது செய்வதை பார்த்தால், தமிழகத்தில் நடப்பது மக்களாட்சியா, சர்வாதிகார ஆட்சியா என்ற கேள்வி எழுகிறது. அடக்குமுறைகளால் அநீதி வென்று விடாது என்பதை அதிகாரத்தில் உள்ளோர் உணரும் நாள் விரைவில் வரும். இவ்வாறு காடேஸ்வரா சுப்ரமணியம் கூறினார்.

Advertisement