லஷ்மி மிட்டல் தந்தை மோகன்லால் காலமானார்
லண்டன்: தொழிலதிபரும் ஆர்சிலர் மிட்டல் நிறுவனத்தின் செயல் தலைவருமான லஷ்மி மிட்டலின் தந்தை மோகன்லால் மிட்டல் தனது 99வது வயதில் லண்டனில் காலமானார்.
இது குறித்து லஷ்மி மிட்டல் கூறுகையில், வயது மூப்பு காரணமாக மோகன்லால் மிட்டல் இயற்கை மரணத்தை எய்தியதாகவும், எளிமையான குடும்பத்தில் பிறந்து வளர்ந்தாலும், இயற்கையிலேயே சிறந்த தொழில்முனைவோராக இருந்ததாகவும் கூறியுள்ளார்.
தனது 100வது வயதை எட்டுவதற்கு சில மாதங்களே இருக்கும் நிலையில் அவர் மறைந்ததாகவும் லஷ்மி மிட்டல் தெரிவித்துள்ளார். மோகன்லால் மிட்டல் மறைவுக்கு பிரதமர் நரேந்திர மோடி, வர்த்தக அமைச்சர் பியூஷ் கோயல் உள்ளிட்ட பலர் இரங்கல் தெரிவித்துள்ளனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
Advertisement
Advertisement