துளிகள்

ரிலையன்ஸ் கன்ஸ்யூமர் வசம் 'பிரில் க்ரீம், டோனி அண்டு கை'

ரி லையன்ஸ் கன்ஸ்யூமர் புராடக்ட்ஸ் நிறுவனம், அழகு பராமரிப்பு பிராண்டுகளான பிரில்க்ரீம், டோனி அண்டு கை, படேடாஸ், இங்கிலாந்தை சேர்ந்த குழந்தைகள் பிராண்டான மேட்டி ஆகியவற்றின் உரிமைகளை வாங்கியுள்ளதாக தெரிவித்துள்ளது.


ஆனால், இவற்றுக்கான உரிமையை பயன்படுத்த செலுத்தப்பட்ட தொகை குறித்து ரிலையன்ஸ், தகவல் தெரிவிக்கவில்லை. இந்த பிராண்டு தயாரிப்புகளின் விற்பனையை உள்நாட்டிலும், சர்வதேச அளவிலும் விரிவுபடுத்த உள்ளதாக அந்நிறுவனம் கூறியுள்ளது.


******************

சீனாவுடன் ரூ.63,000 கோடிக்கு கனடா வர்த்தக ஒப்பந்தம்


சீ னாவுடன் 63,000 கோடி ரூபாய் மதிப்புள்ள வர்த்தக ஒப்பந்தம் மேற்கொண்டுள்ளதாக கனடா பிரதமர் மார்க் கார்னி எக்ஸ் தளத்தில் தெரிவித்துள்ளார். இதன் வாயிலாக, கனடா தொழிலாளர்களுக்கும், தொழில்துறையினருக்கும் புதிய வாய்ப்புகள் கிடைக்கும் என்று அவர் கூறியுள்ளார்.

சமையல் எண்ணெய் தயாரிப்புக்கான 'கனோலா' விதைகளுக்கு இதுவரை 84 சதவீத வரி விதித்த சீனா, அதனை 15 சதவீதமாக குறைக்க ஒப்புக்கொண்டுள்ளது. இதனை அடுத்து, சீன எலக்ட்ரிக் கார்களுக்கு தற்போது விதித்துவரும் 100 சதவீத வரியை குறைக்க இருப்பதாக கனடா அறிவித்துள்ளது.

Advertisement