5 லட்சம் டன் கோதுமை மாவு ஏற்றுமதி செய்ய அனுமதி
புதுடில்லி, நடப்பாண்டில் 5 லட்சம் டன் கோதுமை மாவு ஏற்றுமதி செய்ய வெளிநாட்டு வர்த்தக இயக்குநரகம் அனுமதி அளித்துள்ளது.
கடந்த 2022 மே மாதம் முதல், கோதுமை மற்றும் அதுசார்ந்த பொருட்களின் ஏற்றுமதிக்கு மத்திய அரசு தடை விதித்திருக்கிறது.
இந்நிலையில், மத்திய வேளாண் அமைச்சகம் வெளியிட்ட தகவலின்படி 2024- - 25ம் ஆண்டில் 11.75 கோடி டன் கோதுமை விளைச்சல் கிடைத்தது. 2025- - 26ல் 334.17 லட்சம் ஹெக்டேரில் கோதுமை சாகுபடி செய்யப்பட்டுள்ளது.
இதன் வாயிலாக 11.90 கோடி டன் கோதுமை உற்பத்திக்கு இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது என தெரிவித்திருந்தது.
இந்தாண்டு உற்பத்தி சற்று கூடுதலாக இருப்பதால் 10 லட்சம் டன் வரை கோதுமை மாவு ஏற்றுமதிக்கு அனுமதிக்க வேண்டும் என்று ரோலர் பிளோர் மில்லர்ஸ் பெடரேஷன் ஆப் இந்தியா அமைப்பு கோரிக்கை விடுத்திருந்தது.
இந்நிலையில் வெளிநாட்டு வர்த்தக பொது இயக்குநரகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், எச்.எஸ்., குறியீடு 1101ன் கீழ் வரும் கோதுமை, கோதுமை மாவு, மைதா, ரவை ஆகிய பொருட்களுக்கான ஏற்றுமதி தடை தொடர்கிறது.
இருப்பினும், கோதுமை மாவு மற்றும் அது சார்ந்த பொருட்களை 5 லட்சம் டன் வரை ஏற்றுமதி செய்ய அனுமதி அளிக்கப்படுகிறது என தெரிவித்துள்ளது.
மேலும்
-
இந்தியாவே எனது வீடு, ஆசிரியர்: சர்ச்சைக்கு ஏ.ஆர். ரஹ்மான் விளக்கம்
-
டிரம்ப் ஏமாற்றிவிட்டார்: ஈரான் போராட்டக்காரர்கள் குற்றச்சாட்டு
-
நியூசிலாந்துக்கு ஆரம்பமே தடுமாற்றம்; இந்திய அணி சிறப்பான பந்துவீச்சு
-
மக்கள் மனதில் மிகப்பெரிய மாற்றம்; நயினார் நாகேந்திரன் நம்பிக்கை
-
சவுக்கு சங்கருக்கு உடல் நலக்குறைவு
-
நடுவானில் இண்டிகோ விமானத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்; லக்னோவில் அவசர தரையிறக்கம்