பெடரல் வங்கி லாபம் 9 சதவீதம் உயர்வு

கொச்சியை தலைமையகமாக கொண்ட தனியார் வங்கியான, பெடரல் பேங்கின் நிகர லாபம் கடந்த டிசம்பர் காலாண்டில், 9 சதவீதம் அதிகரித்து 1,041 கோடி ரூபாயானது.

இது குறித்து வங்கி வெளியிட்டுள்ள அறிக்கை:

கடந்த அக்., முதல் டிச., வரையிலான நடப்பு நிதியாண்டின் 3வது காலாண்டில் வங்கியின் நிகர லாபம், முந்தைய ஆண்டின் இதே காலாண்டோடு ஒப்பிடுகையில் 9 சதவீதம் அதிகம். வட்டி அல்லாத பிற வகை வருவாய்களின் வளர்ச்சி இதற்கு முக்கிய காரணமாக உள்ளது.

நிகர வட்டி வருவாய் 9 சதவீதம் உயர்ந்து 2,653 கோடி ரூபாயாக உள்ளது. வட்டி அல்லாத வருவாய் 20 சதவீதம் உயர்ந்து 1,100 கோடி ரூபாயாக உள்ளது. 2024 டிச., 31ல் 1.95 சதவீதமாக இருந்த வாராக்கடன் விகிதம், 2025 டிச., 31ல் 1.72 சதவீதமாக குறைக்கப்பட்டுள்ளது. புதிய நிலையற்ற கடன்கள் 579 கோடி ரூபாயிலிருந்து 435 கோடி ரூபாயாக குறைந்துள்ளன.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Advertisement