பைக் மோதி ஓய்வு பெற்ற அரசு ஊழியர் பலி

திருவெண்ணெய்நல்லுார்: திருவெண்ணெய்நல்லுாரில் பைக் மோதி ஓய்வு பெற்ற அரசு ஊழியர் இறந்தார்,

திருவெண்ணெய்நல்லுார் அனுமார் கோவில் தெருவைச் சேர்ந்தவர் கிருஷ்ணமூர்த்தி, 62; ஓய்வு பெற்ற அரசு ஊழியர். இவர் நேற்று முன்தினம் இரவு 9:00 மணியளவில் அதே பகுதியில் உள்ள கடைக்கு சென்றவர் வீட்டிற்கு நடந்து வந்து கொண்டிருந்தார்.

அப்போது அந்த வழியாக அதிவேகமாக வந்த பல்சர் பைக் கிருஷ்ணமூர்த்தி மீது மோதியது. இதில், கிருஷ்ணமூர்த்தி சம்பவ இடத்திலேயே இறந்தார். விபத்து குறித்து, திருவெண்ணெய்நல்லுார் போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.

Advertisement