காசி தமிழ்ச்சங்கமத்தில் கலந்து கொண்ட தமிழக இளைஞருக்கு பிரதமர் மோடி பாராட்டு
புதுடில்லி: காசி தமிழ்ச் சங்கமத்தில் கலந்து கொண்ட நாமக்கல் இளைஞர் பிரகாஷ் பழனிவேலின் நேர்மையான கருத்துகள் தம் இதயத்தை தொட்டதாக பிரதமர் மோடி பாராட்டி உள்ளார்.
கடந்த டிசம்பர் மாதம், உத்தரப்பிரதேசம் வாரணாசியில் காசி தமிழ்ச் சங்கமம் 4ம் பதிப்பு நடைபெற்றது. இந்த நிகழ்வில் தமிழகத்தில் இருந்து நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோட்டைச் சேர்ந்த மாணவர் பிரகாஷ் பழனிவேல் என்பவர் கலந்து கொண்டார். நிகழ்வில் தமக்கு கிடைத்த அனுபவங்களை அவர், பிரதமர் மோடிக்கு கடிதமாக எழுதி இருந்தார்.
இந் நிலையில், மாணவர் பிரகாஷ் பழனிவேல் கடிதத்திற்கு பிரதமர் மோடி பாராட்டி பதில் அளித்துள்ளார். அதில் அவர் கூறி உள்ளதாவது;
மாணவர் பிரகாஷின் அனுபவங்கள் மகிழ்ச்சியை தருகிறது. அவர் இயற்றிய கவிதை நெஞ்சை தொடுகிறது. தமிழகத்தின் செழுமையான கலாசாரம், வரலாற்று தொடர்புகளை காசி தமிழ் சங்கமம் கொண்டாடும் தளமாக மாறி இருக்கிறது. இந்த பங்களிப்பு மூலம் பிரகாஷ் பழனிவேல் போன்ற மாணவர்கள், ஒரே பாரதம், உன்னத பாரதம் என்ற உணர்வை உயர்த்தி பிடிப்பவர்களாக மாறி உள்ளனர்.
இவர்கள் மற்றவர்களுக்கு ஊக்கம் அளித்து, நாட்டின் ஒற்றுமையை வலுப்படுத்துவார்கள் என்று நம்புகிறேன். மாணவர் பிரகாஷ் பழனிவேலுக்கு எனது வாழ்த்துகள்.
இவ்வாறு பிரதமர் மோடி பாராட்டி உள்ளார். பிரதமரின் இந்த கடிதம் மற்றும் பாராட்டுதலை எதிர்பார்க்கவில்லை என்று மாணவர் பிரகாஷ் பழனிவேல் மகிழ்ச்சி அடைந்துள்ளார். கடிதம் வரும் என்று கற்பனை செய்து கூட பார்க்கவில்லை, எனது குடும்பத்தினரும் மகிழ்ச்சியில் உள்ளனர் என்றார்.
காசி சங்கமத்தில் கலந்து கொண்டவர்கள் திறமையும் ஊக்கமும் உள்ளவர்களென தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள் .
இதுதான் ஆன்மீக பாரம்பரியம் மிக்க உன்னத ஒன்றிய பாரதம் திருவள்ளுவர் கோளில் பொறியில் குணம் இல்லவே எண் குணத்தான் தாளை வணங்காத் தலை என்று தன் திருக்குறள் 9 இல் அந்த ஈசனை வணங்கி சொன்ன உத்தம பாரதம்! காளிதாசனும் தன் சாகுந்தல நாடகத்தில் எண்குணத்தான் ஆகிய ஈசன் ஐ கடவுள் வாழ்ந்தாக வைத்தான் ! மணிமேகலை காப்பியத்திலும் சமய கணக்கர் திறம் கேட்ட காதையில் ஈசன் எண் குணததான் எனப் போற்றப் படுவார்! காசி இராமேஸ்வரம் என எங்கும் நிறைந்து அருளும் இறைவன் அவனே! காசி தமிழ் சங்கமம் இந்த உண்மையை அறிந்து போற்றுவதில் உள்ளது
இப்படி புரியாத புதிர்களை கூறினால் தற்குறி திராவிடத்துக்கு கோபம் வருமே?
உங்களுக்கும் ஒரு 500 போனஸ் கிடைக்குமா?
கலந்து கொண்டவர்களுக்கு டிக்கெட், சாப்பாடு, லாட்ஜ் செலவுடன் தினசரி 500 ரூ பேட்டா கொடுத்தார்கள்.
இப்படிக்கு போலி பெயரில் ஒரு கொத்தடிமை...