மாநில வாலிபால் போட்டி சென்னை அணி 'சாம்பியன்'
பெரியகுளம்: பெரியகுளம் வடுகபட்டியில் நடந்த மாநில வாலிபால் போட்டியில் சென்னை வைஷ்ணவா கல்லூரி அணி 'சாம்பியன்' பட்டம் வென்றது.
பெரியகுளம் அருகே வடுகபட்டியில் சீதையம்மாள் நினைவு சுழற்கோப்பைக்கான மாநில அளவிலான வாலிபால் போட்டி நடந்தது. இதில் 6 அணிகள் பங்கேற்றன. சென்னை வைஷ்ணவா கல்லூரி அணி முதலிடம் வென்றது. தமிழ்நாடு போலீஸ் அணி 2ம் இடம், லயோலா கல்லூரி அணி 3ம் இடமும் வென்றன. வெற்றி பெற்ற அணிகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது.
பரிசளிப்பு விழாவிற்கு இளைஞர் விளையாட்டு கழக தலைவர் டாக்டர் செல்வராஜ் தலைமை வகித்தார். மாவட்ட வாலிபால் கழக தலைவர் ராமானுஜம், மாவட்ட கூடைப்பந்து கழக தலைவர் சிதம்பரசூரியவேலு, வடுகபட்டி பேரூராட்சி தலைவர் நடேசன், துணைத்தலைவர் அழகர், டாக்டர் பாண்டியராஜன், வர்த்தக பிரமுகர் கருணாகரன் முன்னிலை வகித்தனர்.முன்னாள் நில வள வங்கி தலைவர் ஆண்டியப்பன், ஆசிரியர் குமரேசன், பெரியகுளம் விளையாட்டு கழக தலைவர் மணிகார்த்திக் உள்ளிட்டோர் பங்கேற்றனர். சிறந்த தொடர்நாயகன், இளம் விளையாட்டு வீரருக்கு பரிசு வழங்கப்பட்டது. போட்டி ஏற்பாடுகளை ஒருங்கிணைப்பாளர்கள் உதயகுமார், பார்த்திபன், ரெங்கநாதன்,மாரியப்பன், இளைஞர் விளையாட்டு கழக உறுப்பினர்கள் செய்திருந்தனர்.-
மேலும்
-
கிரீன்லாந்தின் இறையாண்மையை நிலைநிறுத்துவோம்: டிரம்புக்கு ஐரோப்பிய ஆணைய தலைவர் பதில்
-
அடுத்தடுத்து நிறைய, வரிசையாக திறப்பு விழாக்கள் காத்திருக்கிறது; முதல்வர் ஸ்டாலின் சஸ்பென்ஸ்
-
தமிழக காங்கிரசில் புதிய மாவட்ட தலைவர்கள் 71 பேர் நியமனம்
-
வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க ஜனவரி 30ம் தேதி வரை கால அவகாசம் நீட்டிப்பு
-
கரூர் நெரிசல் வழக்கு: டில்லி சிபிஐ அலுவலகத்தில் 2வது முறையாக விஜய் ஆஜர்
-
அயராது பாடுபடும் தேசிய பேரிடர் மீட்பு படை: பிரதமர் மோடி புகழாரம்