கரூர் நெரிசல் வழக்கு: டில்லி சிபிஐ அலுவலகத்தில் 2வது முறையாக விஜய் ஆஜர்
நமது டில்லி நிருபர்
கரூர் நெரிசல் வழக்கில் இன்று (ஜனவரி 19) 2வது முறையாக டில்லி சிபிஐ அலுவலகத்தில் விசாரணைக்கு தவெக தலைவர் விஜய் ஆஜரானார்.
கரூர் வேலுச்சாமிபுரத்தில், கடந்த செப்., 27ல் த.வெ.க., தலைவர் விஜய் பங்கேற்ற கூட்ட நெரிசலில் சிக்கி, 41 பேர் இறந்தனர். இச்சம்பவம் குறித்து சி.பி.ஐ., அதிகாரிகள் விசாரித்து வருகின்றனர். விசாரணை இறுதிக்கட்டத்தை எட்டிய நிலையில், விஜயிடம் விசாரணை நடத்த சம்மன் அனுப்பப்பட்டது. டில்லி சி.பி.ஐ., அலுவலகத்தில், விஜய் கடந்த 12ம் தேதி ஆஜரானார். அவரிடம், சி.பி.ஐ., அதிகாரிகள் ஏழு மணி நேரம் விசாரணை நடத்தினர்.
விஜயிடம் விசாரணை முடியாத நிலையில், பொங்கலுக்கு பின் விசாரணைக்கு ஆஜராவதாக சி.பி.ஐ., அதிகாரிகளிடம் விஜய் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. அதை ஏற்றுக்கொண்ட சி.பி.ஐ., அதிகாரிகள், ஜன., 19ம் தேதி விசாரணைக்கு ஆஜராக விஜய்க்கு சம்மன் அனுப்பினர். அதை ஏற்றுக்கொண்ட விஜய், இரண்டாவது முறை விசாரணைக்கு ஆஜராவதற்காக, தனி விமானத்தில் நேற்று டில்லி சென்றார்.
அங்கு நட்சத்திர ஹோட்டலில் தங்கி இருந்தார். இன்று சிபிஐ அலுவலகத்தில் விசாரணைக்கு விஜய் ஆஜரானார். இன்று மாலை வரை விசாரணை நடத்தவும், பல்வேறு கேள்விகளை எழுப்பவும் சிபிஐ அதிகாரிகள் திட்டமிட்டு இருப்பதாக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
@block_P@
சிபிஐ கேள்விகள்
கரூர் பொதுக்கூட்டத்தில் நிலைமை மோசமாகிறது என்பதை நீங்கள் அறியவில்லையா? போலீசார் தடுப்பையும் மீறி வாகனத்தில் சென்றது ஏன்? வாகனத்தில் இருந்தபடி தண்ணீர் பாட்டில் வீசினீர்கள் அப்போது நெரிசல் தெரியவில்லையா? பிரசார இடத்திற்கு தாமதமாக வந்தது ஏன்? சாலைகள் வளைவாக இருந்தது என்றால் ஆதாரங்கள் என்ன ? என கேள்விகளை எழுப்பி பதில்களை பெற்றதாக தகவல் வெளியாகி உள்ளது.
block_P
முதல் நாள் விசாரணைக்கு வந்தது போலவே இன்றும் விஜய் கார் சிபிஐ அலுவலகத்தின் போர்டிகோ வரை சென்று நிறுத்தப்பட்டது. காரில் கண்ணாடி பொருத்தி மறைத்து இருந்ததால் பத்திரிகையாளர்கள் யாரும் படம்பிடிக்க முடியவில்லை.
வாசகர் கருத்து (11)
ஆகுயர்த்தோன் - ,இந்தியா
19 ஜன,2026 - 13:30 Report Abuse
கடந்த 12 ஆம் தேதி நடந்த சிபிஐ விசாரணைக்கு கருப்பு சட்டை அணிந்து வந்திருந்தார் விஜய். கருப்பு சட்டை அணிந்து சிபிஐ விசாரணைக்கு சென்றதால், விஜய் மத்தியில் ஆளும் பாஜகவுக்கு அடிபணிய மாட்டார் என குறியீடாகச் சொல்வதாக தவெகவினர் கூறி வந்தனர். இந்நிலையில், இன்று வெள்ளை சட்டை அணிந்து சிபிஐ விசாரணைக்கு விஜய் ஆஜராகியுள்ளது விமர்சனங்களுக்கு உள்ளாகி வருகிறது. 0
0
Reply
ஆகுயர்த்தோன் - ,இந்தியா
19 ஜன,2026 - 13:26 Report Abuse
அன்று கருப்பு சட்டை , சிபிஐ கு எதிர்ப்பு தெரிவித்து இன்று வெள்ளை சட்டை சமாதான புரா பிறந்ததால் இவன் ல்லாம் ஓவர் அரசியல் வியாதி 0
0
Reply
angbu ganesh - chennai,இந்தியா
19 ஜன,2026 - 12:50 Report Abuse
ஆடிய ஆட்டம் என்ன பேசிய வார்த்தைகள் என்ன கடவுள் இருக்கான் அணில் 0
0
Reply
Savitha - ,
19 ஜன,2026 - 12:00 Report Abuse
கரூரில் 41 பேர் இறந்த போது, சென்று நேரில் பார்த்து, மக்களோடு மக்களாக நிற்க முடியல, அப்போ அவர் செஞ்ச அந்த தவறுக்கு தான் இப்போ டெல்லிக்கு விளக்கம் குடுக்க போறாரு, இதுல என்னமோ, தப்பே செய்யாம அவரை சிபிஐ விசாரிக்க கூப்பிட்டு வதைக்கிற மாதிரி, ஒரு பில்டப் கவிதை எதுக்கு? உங்களுக்கும் இதுக்கெல்லாம் பேட்டா குடுக்க ஆரம்பிச்சிட்டாங்களா விடியல் கட்சி மாதிரி? 0
0
Reply
P Karthikeyan - Chennai,இந்தியா
19 ஜன,2026 - 12:00 Report Abuse
கிறிஸ்துவ மிஷனரிகள் அள்ளித்தரும் பணத்தில் கட்சி நடத்தும் சோசப் விசய் .. இதெல்லாம் தேவையா 0
0
Reply
Ramesh Sargam - Back in Bengaluru, India.,இந்தியா
19 ஜன,2026 - 11:56 Report Abuse
இது விஜய்க்கு கிடைத்திருக்கும் இரண்டாவது அறிய வாய்ப்பு - திமுகவின் கூட்ட நெரிசல் சதியை எடுத்துக்கூற. அப்படி செய்வாரா? 0
0
BHARATH - TRICHY,இந்தியா
19 ஜன,2026 - 14:36Report Abuse
இருந்தால்தானே கூறுவார் இந்த பனையூரான். 0
0
Reply
Venkatesan Ramasamay - ,இந்தியா
19 ஜன,2026 - 11:21 Report Abuse
சென்று வா மகனே சென்று வா
அறிவை வென்று வா மகனே வென்று வா...
அறிவுலகம் உன்னை அழைக்கின்றது
ஏதும் அறியாதவன் என்றே நினைக்கின்றது
அரண்மனை வாசல் திறக்கின்றது
அரண்மனை வாசல் திறக்கின்றது
அங்கே ஆணவம் புன்னகை புரிகின்றது...
உண்மையைச் சொல்வதற்கு படிப்பெதற்கு
எல்லாம் உணர்ந்தவர் போல் நடிக்கும் நடிப்பெதற்கு
கண் கண்ட காட்சிகட்கு விளக்கெதற்கு
நெஞ்சில் கள்ளமில்லாதவர்க்கு பயமெதற்கு
நீ இருக்கும் இடத்தில் நானிருப்பேன்
உன் நிழலிலும் பொருளாகக் குடியிருப்பேன்
தாயிருக்கும் வரையில் கலக்கமில்லை
இந்தத் தாயிருக்கும் வரையில் கலக்கமில்லை
எந்தச் சபையிலும் உனக்கு நடுக்கமில்லை...
சென்று வா மகனே சென்று வா
அறிவை வென்று வா மகனே வென்று வா 0
0
Shekar - ,
19 ஜன,2026 - 11:32Report Abuse
நெஞ்சில் கள்ளம் இல்லாதோர்க்கு பயம் எதற்கு... கண்ணதாசன் சொல்லியிருக்கார். அதாவது நெஞ்சில் கள்ளம் இல்லார்க்கு. எனவே இந்த பாடல் இங்கு பொருந்தாது. 0
0
அப்பாவி - ,
19 ஜன,2026 - 12:18Report Abuse
எல்லோரும் கள்ளக்கணவாளிகளே. யாருக்கு பயமில்லை. எப்படி அடுத்தவனை பீராயலாம்னுதான் பாக்கிறாங்க 0
0
duruvasar - indraprastham,இந்தியா
19 ஜன,2026 - 14:20Report Abuse
பதிலுக்கு பாட்டை எடுத்து போட்டா தாங்கிற சக்தியிருக்கா என்று யோசித்துதான் போட்டிருப்பீர்கள் என நினைக்கிறேன். சமூக வலைத்தளங்களில் கொம்பு சுத்துவதை நிறுத்தங்கள். 0
0
Reply
மேலும்
-
விடைபெற்றது வடகிழக்கு பருவமழை; அடுத்த 7 நாட்களுக்கு வானிலை மையம் அறிக்கை
-
கிரீன்லாந்து மீது டென்மார்க் நாட்டுக்கு என்ன உரிமை இருக்கிறது; கேட்கிறார் அதிபர் டிரம்ப்
-
கிரீன்லாந்தின் இறையாண்மையை நிலைநிறுத்துவோம்: டிரம்புக்கு ஐரோப்பிய ஆணைய தலைவர் பதில்
-
அடுத்தடுத்து நிறைய, வரிசையாக திறப்பு விழாக்கள் காத்திருக்கிறது; முதல்வர் ஸ்டாலின் சஸ்பென்ஸ்
-
தமிழக காங்கிரசில் புதிய மாவட்ட தலைவர்கள் 71 பேர் நியமனம்
-
வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க ஜனவரி 30ம் தேதி வரை கால அவகாசம் நீட்டிப்பு
Advertisement
Advertisement