மாட்டு தொழுவமாக மாறிய நெடுஞ்சாலையால் கடும் அவதி

திருமழிசை: சென்னை - பெங்களூரு தேசிய அதிவிரைவு நெடுஞ்சாலை மாட்டுத்தொழுமாக மாறி, துர்நாற்றம் வீசி வருகிறது. இதனால், வாகன ஓட்டிகள் கடும் அவதிப்பட்டு வருகின்றனர்.

சென்னை - பெங்களூரு தேசிய அதிவிரைவு நெடுஞ்சாலையில், தினமும் ஏராளமான வாகனங்கள் சென்று வருகின்றன. இந்த நெடுஞ்சாலையின் இருபுறமும் கிராம மக்கள் சென்று வரும் வகையில் இணைப்பு சாலை உள்ளது.

இதில், திருமழிசை அடுத்த வரதராஜபுரம் பகுதியில் உள்ள இணைப்பு சாலை மாட்டு தொழுவமாக மாறியுள்ளது. மேலும், சாலையில் தேங்கியுள்ள மாட்டு சாணத்தால் ஏற்படும் துர்நாற்றத்தால், இவ்வழியே செல்லும் வாகன ஓட்டிகள் கடும் அவதிப்பட்டு வருகின்றனர்.

இதனால், இணைப்பு சாலையை பயன்படுத்த முடியாத நிலையில் அப்பகுதி மக்கள் உள்ளனர். மேலும், சாலையில் தேங்கியுள்ள மாட்டு சாணத்தால், மழை நேரத்தில் விபத்தில் சிக்கும் அபாயம் உள்ளது.

எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இணைப்பு சாலை பகுதியில் ஆய்வு செய்து, நடவடிக்கை எடுக்க வேண்டுமென, வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Advertisement