தி.மு.க., சார்பில் மாட்டுவண்டி பந்தயம் ரூ.2.32 லட்சம் பரிசு தொகை வழங்கல்

கரூர்: கரூரில், தி.மு.க., சார்பில் நடந்த மாட்டுவண்டி எல்கை பந்தய போட்டியில், கரூர் எம்.எல்.ஏ., செந்தில்பாலாஜி வெற்றி பெற்றவர்களுக்கு, 2.32 லட்சம் ரூபாய் பரிசு தொகை
வழங்கினார்.



தமிழக முதல்வர் ஸ்டாலின், 73-வது பிறந்த-நாளை முன்னிட்டு, கரூர் மாவட்ட, தி.மு.க., சார்பில் பல்வேறு போட்டிகள் நடத்தப்பட்டு வரு-கின்றன. அதன்படி, கரூர் வேலுச்சாமிபுரத்தில், மாட்டு வண்டி எல்கை பந்தயம் நடந்தது. தி.மு.க., மாவட்ட செயலாளரும், கரூர் எம்.எல்.ஏ.,வுமான செந்தில்பாலாஜி கொடியசைத்து தொடங்கி வைத்தார்.



இப்போட்டிகள், இரட்டை மாடு, பெரிய ஒற்றை மாடு, சிறிய ஒற்றை மாடு என, மூன்று பிரிவாக நடந்தது. சேலம், திண்டுக்கல், கோவை, நாமக்கல், திருச்சி உள்ளிட்ட பல்வேறு மாவட்-டங்களில் இருந்து கலந்துகொண்டனர். பெரிய ஒற்றை மாடு போட்டியில் முதல் பரிசை, கரூர் வி.எஸ்.பி.,க்கு, 30,000 ரூபாய், 2ம் பரிசு, கோவை சிகாமணிக்கு, 20,000 ரூபாய், மூன்றாம் பரிசு கோவை அணிக்கு, 15,000 ரூபாய், நான்காம் பரிசு, கோவை அணிக்கு, 10,000 ரூபாய் வழங்கப்பட்-டது.


சிறிய ஒற்றை மாடு போட்டியில், முதல் பரிசு, சென்னை பட்டாளம் ராஜுவுக்கு, 20,000 ரூபாய், இரண்டாம் பரிசு, லக்காபுரம் நல்லுார் தேவருக்கு, 15,000 ரூபாய், மூன்றாம் பரிசு, கார்த்திகைபட்-டியை சேர்ந்த காரிக்கு, 10,000 ரூபாய், நான்காம் பரிசு, கோவை பேச்சியம்மன் ஜெயதேவ், 7,000 ரூபாய் பரிசு வழங்கப்பட்டது.


இரட்டை மாடு போட்டியில், முதல் பரிசு, கோவை சிகாமணி குரூப்க்கு, 40,000 ரூபாய், இரண்டாம் பரிசு, கரூர் வி.எஸ்.பி.,க்கு, 30,000 ரூபாய், மூன்றாம் பரிசு, காலடிப்பட்டி அஸ்க-ருக்கு, 20,000 ரூபாய், நான்காம் பரிசு, கோவை இம்ரானுக்கு, 15,000 ரூபாய் வழங்கப்பட்டது.


இப்போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு, 12 பேருக்கு, 2.32 லட்சம் ரூபாய் பரிசுத்தொகை மற்றும் கோப்பைகளை, கரூர் எம்.எல்.ஏ.,செந்-தில்பாலாஜி வழங்கினார். எம்.எல்.ஏ.,க்கள் மாணிக்கம், இளங்கோ, சிவகாமசுந்தரி, கரூர் மாநகராட்சி மண்டல தலைவர் ராஜா உள்பட பலர் பங்கேற்றனர்.

Advertisement