சேந்தமங்கலம் கிழக்கில் சமுதாயக்கூடம் திறப்பு
கரூர்: அரவக்குறிச்சி சட்டசபை தொகுதிக்குட்பட்ட, சேந்தமங்கலம் கிழக்கு பஞ்., ஆர்.புதுப்பட்டி, எரு-மநாயக்கனுார் ஆகிய பகுதியில் சமுதாயக்கூடம் திறப்பு நிகழ்ச்சி நடந்தது.
எம்.எல்.ஏ., இளங்கோ திறந்து வைத்தார்.
அப்போது அவர் கூறியதாவது:
முதல்வர் கிராமப்புற சாலை திட்டம் மூலம், 250 கோடி ரூபாய் மதிப்பீட்டில் தார்ச்சாலை அமைக்கப்பட்டு வருகிறது. முருங்கைக்கு, அகில இந்திய அளவில் மதிப்பை உணர்ந்து, கரூரில் முருங்கை கண்காட்சி நடத்தப்பட்டது. அதோடு மட்டுமல்லாமல் அரவக்குறிச்சியில், 6 ஏக்கர் பரப்பளவில் முருங்கை பார்க் அமைக்கப்பட உள்-ளது. இந்த தொகுதியில், 1,500
எஸ்.சி., தொகுப்பு வீடுகள் பராமரிக்கப்பட்டுள்-ளன. நாங்காஞ்சி ஆற்றின் குறுக்கே, அம்மாபட்-டியில் தடுப்பணை அமைக்கப்பட்டுள்ளது, நாகம்-பள்ளியில் கோழி ஆராய்ச்சி நிலையம் அமைக்-கப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
கிரீன்லாந்தின் இறையாண்மையை நிலைநிறுத்துவோம்: டிரம்புக்கு ஐரோப்பிய ஆணைய தலைவர் பதில்
-
அடுத்தடுத்து நிறைய, வரிசையாக திறப்பு விழாக்கள் காத்திருக்கிறது; முதல்வர் ஸ்டாலின் சஸ்பென்ஸ்
-
தமிழக காங்கிரசில் புதிய மாவட்ட தலைவர்கள் 71 பேர் நியமனம்
-
வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க ஜனவரி 30ம் தேதி வரை கால அவகாசம் நீட்டிப்பு
-
கரூர் நெரிசல் வழக்கு: டில்லி சிபிஐ அலுவலகத்தில் 2வது முறையாக விஜய் ஆஜர்
-
அயராது பாடுபடும் தேசிய பேரிடர் மீட்பு படை: பிரதமர் மோடி புகழாரம்
Advertisement
Advertisement