பா.ஜ., நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம்

கரூர்: கரூரில் உள்ள, பா.ஜ., அலுவலகத்தில், நிர்வா-கிகள் ஆலோசனை கூட்டம் நடந்தது. இதில், மாவட்ட தலைவர் செந்தில்நாதன் தலைமை வகித்தார். மாநில துணை தலைவர்
ராமலிங்கம் கலந்துகொண்டார். அதில், வரும், 23ல் சென்-னையில், பா.ஜ., மற்றும் கூட்டணி கட்சிகள் சார்பில் நடக்கும் பொதுக்கூட்டத்தில், பிரதமர் மோடி பங்கேற்க உள்ளார்.


கரூர் மாவட்டத்தில் இருந்து, 5,000 பேர் கலந்து-கொள்ள வேண்டும் என, முடிவு செய்யப்பட்டது. மாவட்ட பொதுச் செயலாளர்கள் செல்வராஜ், சாமிதுரை, உமாதேவி, மாவட்ட பொருளாளர் இளங்கோவன், மாவட்ட துணை தலைவர்கள் சக்திவேல் முருகன், ஆறுமுகம் உள்பட பலர் பங்கேற்றனர்.

Advertisement