பொங்கல் விடுமுறை நிறைவு பஸ் ஸ்டாண்டில் குவிந்த மக்கள்


கரூர்: பொங்கல் பண்டிகை விடுமுறை, நேற்றுடன் நிறைவடைந்ததால், பொதுமக்கள், மாணவ, மாணவியர், பல்வேறு ஊர்களுக்கு செல்ல கரூர் பஸ் ஸ்டாண்டில் குவிந்தனர்.
தமிழர்களின் முக்கிய பண்டிகையான பொங்கல், கடந்த, 14ல் போகியுடன் தொடங்கியது. சூரிய பொங்கல், மாட்டு பொங்கல் மற்றும் காணும் பொங்கலுக்காக, கடந்த, 14 முதல் விடப்பட்ட, அரசு விடுமுறை நேற்றுடன் நிறைவடைந்தது. இன்று முதல் வழக்கம் போல், தமிழகத்தில் அரசு மற்றும் தனியார் பள்ளிகள் அரசு அலுவலகங்கள் செயல்படும்.


இதனால், தொடர் விடுமுறையில் இருந்த அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள், பள்ளி மற்றும் கல்-லுாரி மாணவ, மாணவியர் பல்வேறு ஊர்களுக்கு செல்ல, நேற்று காலை முதல் கரூர் பழைய மற்றும் புதிய பஸ் ஸ்டாண்டில் குவிந்தனர். அதேபோல், கரூர் ரயில்வே ஸ்டேஷனிலும், பொதுமக்கள் பல்வேறு ஊர்களுக்கு செல்ல குவிந்தனர்.

Advertisement