பாரியூர் கொண்டத்துக்காளியம்மன் கோவிலில் மறுபூஜையுடன் குண்டம் திருவிழா நிறைவு

கோபி: கோபி அருகே பாரியூர் கொண்டத்துக்காளி-யம்மன் கோவிலின், குண்டம் தேர்த்திருவிழா மறுபூஜையுடன் நிறைவு பெற்றது.


கோபி அருகே பாரியூர் கொண்டத்துக்காளி-யம்மன் கோவிலில், குண்டம் தேர்த்திருவிழா, கடந்த, டிச., 25ல், பூச்சாட்டுதலுடன் துவங்கி-யது. விழாவின் முக்கிய நிகழ்வாக, கடந்த, 8ல், 20 ஆயிரம் பக்தர்கள் பூமிதித்து நேர்த்திக்கடன் செலுத்தினர். அதையடுத்து, கடந்த, 10ல், மலர்ப்-பல்லக்கு ஊர்வலமும் நடந்தது. பின் கடந்த, 11ல், சூலவேல் மற்றும் விநாயகருடன், கோபிக்க விஜயம் செய்த, பாரியூர் அம்மனுக்கு தெப்போற்-சவம் நடந்தது. பின், கோபி, புதுப்பாளையத்துக்கு விஜயம் செய்த பாரியூர் அம்மனுக்கு மஞ்சள் நீர் உற்சவம் நடந்தது.
இதையடுத்து, கடந்த, 17ல், நஞ்சகவுண்டன்பா-ளையம், செல்வ விநாயகர் கோவிலுக்கு விஜயம் செய்த, பாரியூர் அம்மனுக்கு மஞ்சள் நீர் உற்சவம் நடந்தது. பின் பல வகை மலர்களுடன். ஜொலிக்கும் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட குதிரை வாகனத்தில், பாரியூர் அம்மன் புறப்பாடு நேற்று முன்தினம் இரவு நடந்தது. சாணார்பதி வழியாக, நேற்று முன்தினம் இரவு, 11:00 மணிக்கு, அம்மன் பாரியூர் கோவில் திரும்-பினார். அதுமுதல் ஊஞ்சல் உற்சவம், தேர்வீதி உலா, அர்த்தஜாம பூஜை, முளைப்பாலிகை, காப்பு களைதல் என மறுபூஜை நடந்தது.



நடப்பாண்டு குண்டம் தேர்த்திருவிழா, இத்துடன் நிறைவு பெற்றதாக அறநிலையத்துறையினர் தெரிவித்தனர். தவிர, தை அமாவாசையை முன்-னிட்டு, ஏராளமான பக்தர்கள்
நேற்று அம்மனை வழிபட்டனர்.

Advertisement