ஈரானில் 3,117 பேர் கொலை: ஈரான் டிவி அததிகாரப்பூர்வ அறிக்கை வெளியீடு

டெஹ்ரான்: ஈரான் நாட்டில் ஏற்பட்ட சமீபத்திய போராட்டத்தில் சுமார் 3,117 பேர் உயிரிழந்ததாக அதிகாரப்பூர்வ எண்ணிக்கையை அந்நாட்டு டிவி வெளியிட்டுள்ளது.

ஈரான் நாட்டில் பொருளாதார நெருக்கடிகளுக்கு எதிராக கடந்த ஆண்டு டிச., 28-ல் ஆர்ப்பாட்டம் துவங்கியது. அது பெரும் கலவரமாக மாறியது. ஆர்ப்பாட்டங்களில் இறந்தவர்களின் எண்ணிக்கை குறைந்தபட்சம் 4,560க்கும்மேல் இருக்க கூடும் என அமெரிக்காவை சேர்ந்த அசோசியேட்டட் பிரஸ் தெரிவித்து இருந்தது.

இதனை மறுத்த ஈரான் நாட்டின் வெளியுறவுத்துறை அமைச்சர் அப்பாஸ் அராக்சி வெளியிட்ட அறிக்கை ஒன்றில் ஆர்ப்பாட்டங்களில் இறந்தவர்களின் எண்ணிக்கை 2,427 பேர் . இவர்களில் பொது மக்கள் மற்றும் பாதுகாப்பு படையினர் என கூறப்பட்டு இருந்தது.

உயிரிழப்புகள் குறித்த அதிகாரப்பூர்வ முதல் தகவலை ஈரான் அதிபர் அயதுல்லா அலி கமேனி வெளியி்ட்டார். போராட்டங்களில் 'பல ஆயிரம்' பேர் உயிரிழந்ததாகக் கூறிய அவர், இதற்கு அமெரிக்காவைக் குற்றம் சாட்டினார்.

இதனிடையே புதன்கிழமை (ஜன.,21) -ல் உள்துறை அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில், "பயங்கரவாதிகள் மற்றும் மற்றும் பாதுகாப்புப் படையினர் 2,427 பேர் உயிரிழந்தனர்" என்று உறுதிப்படுத்தியது.

Advertisement