அமைதி வாரியத்தில் சேர அனைத்து நாடுகளுக்கும் விருப்பம்: சொல்கிறார் டிரம்ப்
டாவோஸ்: '' காசா அமைதி வாரியத்தில் சேர்வதற்கு அனைத்து நாடுகளும் விருப்பம் தெரிவித்துள்ளன,'' என அமெரிக்க அதிபர் டிரம்ப் கூறியுள்ளார்.
இஸ்ரேல் தாக்குதலால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள காசாவில் அமைதியை ஏற்படுத்துவதற்காக அமைதி வாரியம் என்ற புதிய அமைப்பு ஒன்றை தனது தலைமையில் அமெரிக்க அதிபர் டிரம்ப் உருவாக்கி உள்ளார். இதில் சேர்வதற்கு அனைத்து நாடுகளுக்கும் அழைப்பு விடுத்துள்ளார். ஆனால், சீனா இந்த அமைப்பில் சேர்வதற்கு மறுப்பு தெரிவித்துவிட்டது. பிரிட்டன், பிரான்ஸ் ஆகிய நாடுகள் இந்த அமைப்பில் சேர்வதை நிறுத்திவைத்துள்ளன.
இந்த வாரியத்தின் துவக்க விழா இன்று சுவிட்சர்லாந்தின் டாவோஸ் நகரில் நடந்தது. இதில் டிரம்ப் பேசியதாவது: கடந்த ஓராண்டுக்கு முன்பு இருந்ததை விட இன்றைய உலகம் செல்வச்செழிப்பாகவும், பாதுகாப்பாகவும், இன்னும் அமைதியாகவும் உள்ளது. அனைத்து மோதல்களையும் நிறுத்தி வைத்துள்ளோம். இரண்டு அணுசக்தி நாடுகளான இந்தியா பாகிஸ்தான் இடையிலான மோதலை நிறுத்தியதில் மகிழ்ச்சி. 1 அல்லது 2 கோடி பேரின் உயிரை அதிபர் டிரம்ப் பாதுகாத்தார் என பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஷ் ஷெரீப் கூறியது எனக்கு பெருமை அளிக்கிறது.
இந்த அமைதி வாரியத்தில் சேர அனைவரும் விரும்புகின்றனர். இது சுமூகமாக செயல்படுகிறது. ஐநா உள்ளட்ட மற்ற அமைப்புகளுடன் இணைந்து செயல்பட விரும்புகிறோம். மத்திய கிழக்கில் அமைதி ஏற்பட வேண்டும் என்ற நோக்கத்திற்காக இந்த அமைதி வாரியத்தில் 59 நாடுகள் பங்கெடுத்துள்ளன.
இதுவரை உருவாக்கப்பட்ட அமைப்புகளில் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த ஒன்றாக மாறுவதற்கான சாத்தியக்கூறுகளை இந்த வாரியம் கொண்டுள்ளது. இதற்கு தலைமை தாங்குவதற்கு நான் பெருமைப்படுகிறேன். இது மிகச்சிறப்பாக செயல்பட்டு வருகிறது. ஒவ்வொரு நாடும் இந்த அமைப்பில் அங்கமாக இருக்க விரும்புகிறது. இந்த வாரியம் முழுமையாக அமைக்கப்பட்ட உடன், நாம் விரும்பியதை எல்லாம் செய்ய முடியும். ஹமாஸ் அமைப்பினர் ஆயுதங்களை கீழே போட வேண்டும். இல்லாவிட்டால் அவர்களுக்கு முடிவு கட்டப்படும். இதற்கான அறிவிப்பை அந்த அமைப்பினர் 2 அல்லது 3 வாரங்களில் வெளியிட வேண்டும்.இவ்வாறு அவர் கூறினார்.
இந்த வாரியத்தில் இணைந்த நாடுகள்
* பஹ்ரைன்
*மொராக்கோ
*அர்ஜென்டினா
*ஆர்மேனியா
*அஜர்பைஜான்
*பல்கேரியா
*ஹங்கேரி
*இந்தோனேஷியா
*ஜோர்டான்
*கஜகிஸ்தான்
*கொசாவோ
*பாகிஸ்தான்
*பராகுவே
*கத்தார்
*சவுதி அரேபியா
*துருக்கி
*ஐக்கிய அரபு எமீரேட்ஸ்
*உஸ்பெகிஸ்தான்
*மங்கோலியா
தற்போதைக்கு இந்த வாரியத்தில் சேர்வதை நிறுத்திவைத்துள்ள நாடுகள்
*பிரான்ஸ்
*நார்வே
*ஸ்லோவேனியா
*சுவிடன்
*பிரிட்டன்
அமைதிக்கும் டிரம்புக்கும் என்னடா சம்பந்தம் இருக்கிறது அமைதி வாரியம் யார் ஏற்படுத்துவது யார் அதை கண்காணிப்பது என்ற விவஸ்தையே கிடையாதா இரண்டு அணு ஆயுத நாடுகளிடையே வரும் போரை நிறுத்தினவன் தானே என்று தம்பட்டம் அடித்துக்கொண்டால் போதாது அந்த இரண்டு நாடுகளும் இன்னுமும் இந்த வாரியத்தில் சேரவில்லையே அமைதி என்ற வார்த்தைக்கே அடிபோனவர் இந்த உலகில் நமது பாரத பிரதர்மர்தான் அதற்கு யாருமே போட்டி போட முடியாது அவருக்கு நிகர் அவரேதான் வேறு யாருமே கிடையாது
யாருமில்லா கடையில் ட்ரம்ப் டீ ஆத்திக்கொண்டிருக்கிறார். இத்துபோன நாடுகளை வைத்துக்கொண்டு அமைதி வாரியத்தில் ட்ரம்ப் என்ன செய்ய போகிறார்? இந்தியா, சீனா, மற்றும் மேலை நாடுகள் இதை புறக்கணித்துவிட்டன .
அமைதிக்கும் பாகிஸ்தானுக்கும் என்னடா சம்பந்தம். ஒரு பில்லியன் பாகிஸ்தானி ரூபாவுக்கே அவனிடம் வழியில்லை. ஒரு பில்லியன் டாலருக்கு எங்கே போவான்
அமைதி வாரியம் உன்னை அள்ளிக்கொண்டு போகப் போகிறது.
அங்கே என்ன ஆயிலும், தங்கமும் ஓடுதா?
சேர மறுத்தால், நீங்கள் அந்த சேர மறுக்கும் நாடுகள் மீது அதிக வரி விதிப்பீர்கள், அந்த நாட்டையே உங்கள் நாட்டுடன் சேர்த்துக்கொள்ள முடிவு எடுப்பீர்கள், அந்த நாட்டுக்கு நீங்கள்தான் அதிபர் என்று மிரட்டுவீர்கள். அந்த பயத்தில் அணைத்து நாடுகளும் பயந்துகொண்டே விருப்பம் தெரிவிக்கின்றன.
இன்னும் பதில் அளிக்காத நாடுகளின் பட்டியலில் UK கனடா போன்ற நாடுகள் விடுபட்டுள்ளனவே. சேராதிருந்தால் நல்லதே . அந்த ஒரு பில்லியன் டாலரை வைத்து இந்திய மக்களுக்கு இந்திய பாதுகாப்புக்கு எவ்வளவோ செய்யலாம்.
திருட்டு, கொலை, கொள்ளைக்காரனுக்கு என்ன வெங்காய அமைதி வாரியம்? வெட்கமாக இல்லையா
அப்ப UNSC எல்லாம் WASTEஆ ?
இது இந்த உலகத்தின் பேட்டை ரவுடி நடத்துவதுமேலும்
-
காசா அமைதி வாரியம் சர்வதேச அமைப்பாக மாற்றம்
-
ஸ்டாலின் பணம் கொடுத்ததற்கு நேரடியான ஆதாரங்கள் இருக்கிறதா? தேர்தல் வழக்கில் நீதிபதிகள் கேள்வி
-
திருச்சி மாநாட்டில் தி.மு.க., வேட்பாளர் பட்டியல்?
-
அமைச்சர் துறையில் ஊழல்: வழக்கு தொடர ஈ.டி., முடிவு?
-
ஆப்பரேஷன் சிந்துாரின்போது எதிரிகளை மண்டியிட வைத்தது 'பிரம்மோஸ்': விஞ்ஞானி சிவதாணுபிள்ளை தகவல்
-
துாத்துக்குடியில் ரூ.2,292 கோடிக்கு கடல்நீரை குடிநீராக்கும் ஆலை அடிக்கல் நாட்டினார் முதல்வர்