ஜெ., போல் விஜய்க்கு வெற்றி: செங்கோட்டையன் நம்பிக்கை

24

சென்னை: த.வெ.க--., தேர்தல் பிரசாரக் குழுவின் முதல் ஆலோசனை கூட்டம், நேற்று பனையூரில் நடந்தது.


இது குறித்து, செங்கோட்டையனும், ஆதவ் அர்ஜுனாவும் கூட்டாக அளித்த பேட்டி: த.வெ.க., தலைமை நிர்வாகிகள் அனைவரும், வரும் 26 முதல், தொகுதி வாரியாக சுற்றுப்பயணம் மேற்கொண்டு, நிர்வாகிகளுடன் கலந்துரையாட உள்ளோம். விஜயின் பயணத் திட்ட ஏற்பாடு நடக்கிறது. காவல் துறை அனுமதியோடு விரைவில் துவங்குவோம்.


கடந்த 2011--ல் நடந்த சட்டசபை தேர்தலில், மூன்றே கூட்டங்களை நடத்தி வெற்றி பெற்றார் ஜெயலலிதா. அதேபோல விஜயும் வெற்றி பெறுவார். அ.ம.மு.க., தினகரன் எங்கிருந்தாலும் வாழ்க. அதே நேரத்தில் தினகரன் - பன்னீர்செல்வம் ஆதரவாளர்கள் விரைவில் த.வெ.க-.,வில் இணைவர். இவ்வாறு அவர்கள் கூறினர்.


கடந்த டிசம்பரில் நடந்த கிறிஸ்துமஸ் விழாவுக்கு பின், கடந்த ஒரு மாதமாக விஜய் எந்த அரசியல் நிகழ்விலும் பங்கேற்கவில்லை.




இந்நிலையில் தான், விஜய் தலைமையில், மாமல்லபுரத்தில் வரும் 25ல் த.வெ.க., செயல்வீரர்கள் கூட்டம் நடக்க உள்ளது. பிப்ரவரி முதல் வாரத்திலிருந்து, விஜய் பிரசார சுற்றுப்பயணம் மீண்டும் துவங்க உள்ளதாக கூறப்படுகிறது.

Advertisement