அரசு ஊழியர்களின் மகிழ்ச்சி அதிமுகவுக்கு பிடிக்கவில்லை: முதல்வர் ஸ்டாலின்

14


சென்னை: போராட்டத்தில் ஈடுபட்ட அரசு ஊழியர்களை சிறையில் அடைக்கவில்லை. 23 ஆண்டு கால ஓய்வூதிய பிரச்னையை தீர்த்துவைத்துள்ளோம். அரசு ஊழியர்களின் மகிழ்ச்சி அதிமுகவுக்கு பிடிக்கவில்லை என முதல்வர் ஸ்டாலின் தெரிவித்தார்.

சட்டசபையில் எதிர்க்கட்சி தலைவர் இபிஎஸ் கேள்விக்கு முதல்வர் ஸ்டாலின் பதில் அளித்து பேசியதாவது: அரசு ஊழியர்கள் போராடி கொண்டு இருப்பதை மிகுந்த கவலையோடு, வருத்தத்தோடு, அக்கறையோடு நம்முடைய அமைச்சர் எதிர் கொண்டு இருக்கிறார். இந்த அக்கறை உங்கள் ஆட்சியில் ஏன் இல்லை?


அரசு ஊழியர்கள் ஏதாவது கோரிக்கை வைத்து போராடுபவது அவர்களின் உரிமை.
ஆனால் உரிமையோடு போராடக்கூடிய போராட்டத்தை கூட முடிக்க வேண்டும், தொடரக்கூடாது என்ற நல்ல எண்ணத்தோடு தொடர்ந்து பல முறை அமைச்சர்கள் குழு பேச்சு நடத்தியது.

முழுமையாக தீர்க்கவில்லை என்று சொன்னாலும், 95 சதவீதம் தீர்த்து வைத்து இருக்கிறோம். போராட்டத்தில் ஈடுபட்ட அரசு ஊழியர்களை நாங்கள் கைது செய்யவில்லை. கொண்டு போய் ஜெயிலில் அடைக்கவில்லை.


கடந்த முறை அதிமுக ஆட்சியில் நடந்தது. எங்கள் ஆட்சியில் நடக்கவில்லை. நமது எதிர்க்கட்சி தலைவர் முதல்வராக இருந்த போது அரசு ஊழியர்களை அதிக சம்பளம் வாங்கி கொண்டு இருப்பதாக கொச்சைப்படுத்தி பேசியதை இந்த நாடு மறந்தவிடவில்லை என்பதையும் உறுப்பினர்களுக்கு நான் தெரிவித்து கொள்கிறேன். 23 ஆண்டு கால ஓய்வூதிய பிரச்னையை தீர்த்துவைத்துள்ளோம்; அரசு ஊழியர்களின் மகிழ்ச்சி அதிமுகவுக்கு பிடிக்கவில்லை. இவ்வாறு முதல்வர் ஸ்டாலின் பேசினார்.

Advertisement