வேலை உறுதி திட்டத்தில் மாற்றத்தை எதிர்த்து பார்லி.,யில் குரல் எழுப்புவோம்: கார்கே

9

புதுடில்லி: வரவிருக்கும் பட்ஜெட் கூட்டத்தொடரில் தேசிய மகாத்மா காந்தி ஊரக வேலைவாய்ப்பு உறுதித் திட்டம் சட்டம் நீக்கப்பட்டதற்கு எதிராக காங்கிரஸ் வலுவாக குரல் எழுப்பும் என்று காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன் கார்கே அறிவித்துள்ளார்.
ஜனவரி 28 முதல் பிப்ரவரி 13 வரை பார்லி.,யில் பட்ஜெட் கூட்டத்தொடர் நடைபெற இருக்கிறது.

இந்நிலையில் இன்று (ஜனவரி 22) டில்லியில் தேசிய மகாத்மா காந்தி ஊரக வேலைவாய்ப்பு உறுதித்திட்ட தொழிலாளர்கள் மாநாடு நடைபெற்றது.
தொழிலாளர்கள் மாநாட்டில் கார்கே பேசியதாவது:

நுாறு நாள் வேலை உறுதி திட்டத்தை ரத்து செய்வது பொதுமக்களின் நினைவிலிருந்து மகாத்மா காந்தியின் பெயரை அகற்றுவதற்கான முயற்சி என்றும், 'கிராம ஸ்வராஜ்' கொள்கையை பலவீனப்படுத்தும் செயல்.
டிசம்பரில் நிறைவேற்றப்பட்ட 'விக்சித் பாரத் - ரோஜ்கார் அஜீவிகா மிஷன்' என்ற புதிய சட்டத்திற்குப் பதிலாக நுாறு நாள் வேலை உறுதி திட்டம் மாற்றப்பட்டுள்ளது. இதை காங்கிரஸ் கட்சி கடுமையாக எதிர்க்கிறது.


இப்புதிய சட்டத்திற்கு எதிராக ஜனவரி 10 முதல் 45 நாட்கள் தழுவிய வேலை உறுதி திட்டத்தை காப்போம் போராட்டம் என்ற பிரச்சாரத்தை காங்கிரஸ் தொடங்கியுள்ளது.பட்ஜெட் கூட்டத்தொடரில், இச்சட்டத்தை மீண்டும் கொண்டு வரவும், ஏழைகளின் உரிமைகளைப் பாதுகாக்கவும் போராடுவோம்.


இவ்வாறு கார்கே பேசினார்.

Advertisement