ஆங்கிலத்தில் 'நபின்': ஹிந்தியில் 'நவின்'

3


- நமது டில்லி நிருபர் -


பா.ஜ.,வின் புதிய தேசிய தலைவராக பொறுப்பேற்றுள்ள நிதின் நபின் பெயரை, ஆங்கிலத்தில் உச்சரிக்கும்போது ஒரு விதமாகவும், ஹிந்தியில் உச்சரிக்கும்போது இன்னொரு விதமாகவும், உச்சரிப்பதோடு, அவ்வாறே எழுதும்படியும் பத்திரிக்கையாளர்களுக்கு, பா.ஜ., தலைமை அறி வுறுத்தியுள்ளது.
பா.ஜ.,வின் புதிய தேசிய தலைவராக, நிதின் நபின் சமீபத்தில் பொறுப்பேற்றார். இந்நிலையில், அவரது பெயரை எவ்வாறு உச்சரிக்க வேண்டும் என்பது குறித்து, ஊடகங் களுக்கு, பா.ஜ., தலைமை சார்பில் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

அதாவது, ஆங்கிலத்தில் உச்சரிக்கும்போது, 'நிடின் நபின்' என்றும்; ஹிந்தியில் உச்சரிக்கும்போது, 'நிடின் நவின்' என்றும் கூற வேண்டுமாம்.

புதிய தலைவராக நிதின் நபின் பொறுப்பேற்றுக் கொண்ட சில மணி நேரங்களில், அச்சு ஊடகங்களைச் சேர்ந்த ஆங்கிலம் மற்றும் ஹிந்தி பத்திரிகையாளர்கள் அனைவருக்கும், பா.ஜ., தலைமை அலுவலகத்திலிருந்து, 'மிக முக்கியமான தகவல்' என குறிப்பிட்டு இந்த பெயர் உச்சரிப்பு விபரம் தெரிவிக்கப்பட்டது.

Advertisement