திருச்சி மாநாட்டில் தி.மு.க., வேட்பாளர் பட்டியல்?

3

சட்டசபை தேர்தல் அட்டவணையை, தேர்தல் கமிஷன் முன்கூட்டியே வெளியிடும் என தி.மு.க., தரப்பில் எதிர்பார்க்கப்படுகிறது. அதனால், கூட்டணி கட்சிகளுடன் தொகுதி பங்கீடு குறித்து பேச குழு அமைக்கப்படுகிறது.


அக்குழுவில், துணை முதல்வர் உதயநிதி இடம் பெறுவது உறுதியாகி உள்ளது. பிப்., இரண்டாவது வாரத்திற்குள், கூட்டணி கட்சிகளுக்கு தொகுதி பங்கீட்டை முடிக்க தி.மு.க., திட்டமிட்டுள்ளது.


தி.மு.க.,வில் போட்டியிட விரும்புவோரிடம், பிப்., முதல் வாரத்திற்குள் விருப்ப மனுக்கள் பெறப்பட உள்ளது. பின், நேர்காணலை முடித்து தி.மு.க., வேட்பாளர் பட்டியல் தயாரிக்கப்பட உள்ளது.



திருச்சியில், மார்ச் 8ல் நடக்கும் தி.மு.க., மாநில மாநாட்டில், வேட்பாளர்களை அறிவிக்க முதல்வர் ஸ்டாலின் திட்டமிட்டுள்ளார்


- நமது நிருபர் - .

Advertisement