குற்றவாளிகளை காப்பாற்ற மட்டுமே ஆட்சி நடத்தும் திமுக: அண்ணாமலை குற்றச்சாட்டு
சென்னை: குற்றவாளிகளை காப்பாற்ற மட்டுமே திமுக ஆட்சி நடத்திக் கொண்டிருக்கிறது என தமிழக பாஜ முன்னாள் தலைவர் அண்ணாமலை குற்றம் சாட்டியுள்ளார்.
அவரது அறிக்கை: சேலம் மேச்சேரி பஸ் நிலையம் அருகே, திமுக நிர்வாகி பிரசாந்த், அவரது அம்மா மற்றும் சகோதரர் சட்டவிரோதமாக 24 மணி நேரமும் மதுபானம் விற்பனை செய்து வருகின்றனர். இது குறித்து புகார் அளித்தும், நான் அமைச்சர் ஆள், ஆட்சி எங்களுடையது என்று கூறி போலீஸ் அதிகாரிகளை மிரட்டுவதால், மேச்சேரி காவல் துறை நடவடிக்கை எடுக்காமல் இருப்பதாக கூறப்படுகிறது.
திமுக நிர்வாகிகள், சட்டத்தையும், காவல் துறையையும் அச்சுறுத்துவது சாதாரணமாகி விட்டது. திமுக ஆட்சியில், சட்டம், திமுகவினரின் முறைகேடான செயல்பாடுகளுக்கே துணை நிற்கிறது. திமுக கட்சியில் இருந்தால், என்ன குற்றம் செய்தாலும் நடவடிக்கை இல்லை என்ற நிலை உருவாக்கப்பட்டிருக்கிறது. இது திமுக ஆட்சியில் நடைபெறும் அதிகார துஷ்பிரயோகத்தின் மற்றுமொரு உதாரணம்.
குற்றவாளிகளை காப்பாற்ற மட்டுமே திமுக ஆட்சி நடத்திக் கொண்டிருக்கிறது. சேலம் மாவட்ட நிர்வாகமும், காவல் துறையும், உடனடியாக இந்த சட்ட விரோத மது விற்பனையைத் தடுத்து நிறுத்த வேண்டும். பொதுமக்களுக்குப் பாதுகாப்பு கொடுக்கவே சட்டமும், காவல்துறையும். ஆளுங்கட்சியினரின் முறைகேடுகளுக்குத் துணை நிற்பதற்கு அல்ல. இவ்வாறு அண்ணாமலை கூறியுள்ளார்.
அவரது சொந்தக் கட்சியிலிருந்து அவரது பதவி நீக்கப்பட்ட பிறகு, அவர் ஏன் எப்போதும் மற்ற கட்சிகளில் தலையிடுகிறார். பாஜக ஆளும் மாநிலங்கள் எல்லா அம்சங்களிலும் பின்தங்கியிருப்பதையும், மத்திய அரசு தமிழகம் மற்றும் பிற தென் மாநிலங்கள் செலுத்தும் வரிகளிலிருந்து அவர்களுக்கு நிதியுதவி செய்வதையும் அவர் அறிவார்.
குற்றவாளிகளை காப்பாற்ற மட்டுமே ஆட்சி நடத்தும் திமுக ???? திமுகவைக் காப்பாற்ற மட்டுமே ரெயிடுகள் நடத்தும் பாஜக ......
குற்றவாளிகளால் நடத்தப்படும் ஆயிற்றே . குற்றவாளிகளை அமைச்சர்களாக்கி "அழகு" பார்க்கின்றார்களே
திமுகவின் குற்றவாளிகளை உங்கள் மத்திய அரசு ஏன் காப்பாற்றிக் கொண்டிருக்கிறது.
என்ன செய்வது? குற்றம் செய்பவர்கள் ஏறத்தாழ தொண்ணுற்றி ஐந்து சதவிகிதம் பேர் கட்சிக்காரனாகவே இருக்கானுவ.மேலும்
-
போலீஸ் வாகனம் மீது நாட்டு வெடிகுண்டு வீச்சு; கைதியை கொல்ல முயன்றதால் அதிர்ச்சி
-
கட்சியின் கொள்கையை ஒருபோதும் மீறவில்லை; சொல்கிறார் காங் எம்பி சசிதரூர்
-
திமுகவும், அதிமுகவும் வேறு வேறு கட்சியா; கேட்கிறார் சீமான்
-
இந்தியா மீதான கூடுதல் வரியை குறைக்கலாம்; அமெரிக்க அமைச்சர் சூசகம்
-
தமிழகத்தில் நாளை 9 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு: வானிலை மையம் தகவல்
-
வர்த்தக ஒப்பந்தங்களால் இளைஞர்களுக்குப் புதிய வேலைவாய்ப்பு; பிரதமர் மோடி பெருமிதம்