நிதி பெற்று தருவதாக மோசடி; லக்னோ வாலிபர் கைது
புதுச்சேரி: தனியார் நிறுவனத்தை விரிவாக்கம் செய்ய முதலீடு பெற்று தருவதாக மோசடி செய்த வாலிபரை போலீசார் கைது செய்துள்ளனர்.
புதுச்சேரி, சஞ்சீவி நகரில் லுாகாஸ் இம்பெக்ஸ் என்ற தனியார் நிறுவனம் இயங்கி வருகிறது.
இந்த நிறுவனத்தின் இயக்குனரை, கடந்த ஜூலை 23ம் தேதி, ஜோதி பிரகாஷ் திரிபாதி, 49, என்பவர் தொடர்பு கொண்டார். டில்லி மற்றும் உத்தர பிரதேசத்தில் இயங்கி வரும் டெக்னாலஜிஸ் பிரைவேட் லிமிடெட் என்ற நிறுவனத்தின் இயக்குனர் என தன்னை அறிமுகப்படுத்தி கொண்டார்.
லுாகாஸ் இம்பெக்ஸ் நிறுவனம் தொடர்பான துறைமுகம் மற்றும் கப்பல் கட்டும் தளம் திட்டத்திற்கு முதலீட்டு நிதி மற்றும் வங்கி மூலம் கடன் ஏற்பாடு செய்து தருவதாக உறுதி அளித்துள்ளார். இதையடுத்து ஜோதி பிரகாஷ் திரிபாதிக்கு, ரூ.29.50 லட்சம் அனுப்பி வைக்கப்பட்டு, கடந்த ஆகஸ்ட் 20ம் தேதி புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்யப்பட்டது.
ஆனால் அந்த நபர் தெரிவித்தபடி, முதலீட்டு நிதி எதுவும் ஏற்பாடு செய்து தரவில்லை. மேலும், பெற்ற பணத்தையும் திரும்பத் தராமல் அலைக்கழித்து வந்துள்ளார். இது குறித்த புகாரின் பேரில், டி.நகர் சப் இன்ஸ்பெக்டர் ரமேஷ் மற்றும் போலீசார் வழக்குப் பதிந்து, உத்தரப்பிரதேச மாநிலம் லக்னோவில் பதுங்கி இருந்த ஜோதி பிரகாஷ் திரிபாதியை நேற்று முன்தினம் கைது செய்தனர். பின், அவரை நேற்று கோர்ட்டில் ஆஜர் படுத்தி காலாப்பட்டு சிறையில் அடைத்தனர்.
மேலும்
-
ககன்யான் திட்டம் தாமதம் ஆகாது; இஸ்ரோ தலைவர் நாராயணன் உறுதி
-
அமெரிக்காவை புரட்டிப்போடும் பனிப்புயல்; 8,000க்கும் மேற்பட்ட விமானங்கள் ரத்து
-
இஸ்ரோவின் அடுத்த மெகா திட்டம்; விண்வெளி நிலையம் அமைக்கும் பணி தீவிரம்
-
அரசு ஊழியர்களுக்கு 3வது பிரசவத்திற்கும் மகப்பேறு விடுப்பு; ஐகோர்ட் உத்தரவு
-
போலீஸ் வாகனம் மீது நாட்டு வெடிகுண்டு வீச்சு; கைதியை கொல்ல முயன்றதால் அதிர்ச்சி
-
கட்சியின் கொள்கையை ஒருபோதும் மீறவில்லை; சொல்கிறார் காங் எம்பி சசிதரூர்