வர்த்தக ஒப்பந்தங்களால் இளைஞர்களுக்குப் புதிய வேலைவாய்ப்பு; பிரதமர் மோடி பெருமிதம்

8


புதுடில்லி: வர்த்தக ஒப்பந்தங்களால் இளைஞர்களுக்குப் புதிய வேலைவாய்ப்புகள் உருவாகி வருவதாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.


ரோஜ்கர் மேளா திட்டத்தின் கீழ், அரசுப் பணிகளுக்கான 61,000 பணி நியமனக் கடிதங்களை அளிக்கும் திட்டத்தை பிரதமர் மோடி வீடியோ கான்பரன்ஸ் வாயிலாக தொடங்கி வைத்து பிரதமர் மோடி பேசியதாவது:

இந்தியாவிலும் வெளிநாடுகளிலும் உள்ள இளைஞர்களுக்குப் புதிய வேலைவாய்ப்புகளை உருவாக்கும் வகையில், இந்தியா வர்த்தக ஒப்பந்தங்களை மேற்கொண்டு வருகிறது. உலகில் அதிக எண்ணிக்கையிலான இளைஞர்களைக் கொண்ட நாடு இந்தியா. புத்தாண்டு உங்கள் வாழ்வில் மகிழ்ச்சியின் புதிய அத்தியாயத்தைத் தொடங்குகிறது.



இந்தியாவிலும் வெளிநாடுகளிலும் உள்ள இளைஞர்களுக்கு அதிகமான வேலைவாய்ப்புகளை உருவாக்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. வேலைவாய்ப்பு உருவாக்கத்திற்கு அதிக முன்னுரிமை அளிப்பதற்கான பிரதமரின் உறுதிப்பாட்டிற்கு இணங்க, இந்த தொலைநோக்குப் பார்வையைச் செயலாக மாற்றுவதை நோக்கமாகக் கொண்ட ஒரு முக்கிய முயற்சிதான் இந்த ரோஜ்கர் மேளா திட்டத்தின் நோக்கம்.

வாழ்க்கையையும், வணிகத்தையும் எளிதாக்கும் நோக்கில் இந்தியா சீர்திருத்தங்களை மேற்கொண்டு வருகிறது. இவ்வாறு பிரதமர் மோடி பேசினார்.

Advertisement