மிகப்பெரிய உத்வேகம் கொடுப்பவர் நேதாஜி; பிரதமர் மோடி
புதுடில்லி: நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் எப்போதும் எனக்கு மிகப்பெரிய உத்வேகம் அளிப்பவராக இருந்து வருகிறார் என்று நேதாஜியின் பிறந்த நாளில் பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். மேலும், அவர் இதுவரையில் நேதாஜியை சிறப்பிக்கும் விதமாக செய்த செயல்களையும், திட்டங்களையும் அவர் நினைவுகூர்ந்து பகிர்ந்துள்ளார்.
அவரது அறிக்கை; நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் எப்போதும் எனக்கு மிகப்பெரிய உத்வேகம் அளிப்பவராக இருந்து வருகிறார். குஜராத்தின் தகவல் தொழில்நுட்பத் துறையை மறுசீரமைக்கும் முன்னோடித் திட்டமான இ-கிராம் விஸ்வகிராம் யோஜனா 2009ம் ஆண்டு ஜனவரி 23ம் தேதி தொடங்கப்பட்டது. நேதாஜியின் வாழ்வில் ஒரு தனிச்சிறப்பு வாய்ந்த இடத்தைப் பெற்றுள்ள ஹரிபுரா கிராமத்தில் இருந்து இத்திட்டம் தொடங்கப்பட்டது. ஹரிபுரா மக்கள் என்னை வரவேற்ற விதத்தையும், நேதாஜி பயணம் செய்த அதே பாதையில் எனக்காக ஊர்வலத்தை ஏற்பாடு செய்ததையும் என்னால் ஒருபோதும் மறக்க முடியாது.
2012ம் ஆண்டு, ஆசாத் ஹிந்த் பவுஜ் தினத்தை முன்னிட்டு ஆமதாபாத்தில் ஒரு பிரம்மாண்டமான நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டது.
நாட்டை பல ஆண்டுகளாக ஆட்சி செய்தவர்களால் (காங்கிரஸ்) நேதாஜியை மறக்கடிக்க வைக்கும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. ஆனால் நாங்கள் நேதாஜியின் வாழ்க்கை மற்றும் லட்சியங்களை மக்களிடையே கொண்டு சென்றுள்ளோம். நேதாஜி தொடர்பான கோப்புகள் மற்றும் ஆவணங்களை வெளிப்படுத்தியது ஒரு முக்கிய மைல்கல்லாகும்.
2018ம் ஆண்டு செங்கோட்டையில், ஆசாத் ஹிந்த் அரசு நிறுவப்பட்டதன் 75வது ஆண்டைக் கொண்டாடினோம். அங்கு மூவர்ணக் கொடியை ஏற்றும் வாய்ப்பு எனக்குக் கிடைத்தது. மேலும், ஐஎன்ஏ வீரர் லால்தி ராம் ஜியுடனான எனது சந்திப்பு மறக்க முடியாத ஒன்றாக அமைந்தது. அந்தமான் மற்றும் நிக்கோபார் தீவுகளில் உள்ள ராஸ் தீவுக்கு 'நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் தீவு' என்று பெயர் வைக்கப்பட்டது.
நேதாஜிக்கு மரியாதை செலுத்தும் விதமாக, அவரது பிறந்த நாள் 'பராக்ரம் திவாஸ்' என்று அறிவிக்கப்பட்டுள்ளது. நாட்டின் தலைநகரின் இதயப்பகுதியான 'இந்தியா கேட்' அருகே அவரது பிரம்மாண்டமான சிலையை நிறுவப்பட்டது. இந்தச் சிலை எதிர்கால தலைமுறையினருக்குப் பெரும் ஊக்கமளிக்கும், இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
சாவர்க்கர், வ உ சி, பகத் சிங்க் மற்றும் ஏராளமானோர் சிறையில் அடைத்த பின் சித்ரவதை செய்த கிறித்துவ வெள்ளையன், ஏன் காந்தி நேருவுக்கும் மட்டும் வ ஐ பி சிறையில், புத்தகம் படிக்க வசதி, நேருவுக்கு விளையாட வசதி செய்து கொடுத்தது ?
சிந்தியுங்கள்மேலும்
-
டபுள் எஞ்சின் எனும் டப்பா எஞ்சின் தமிழகத்தில் ஓடாது!: முதல்வர் ஸ்டாலின்
-
தே.ஜ., கூட்டணி பொதுக்கூட்டத்தில் பிரதமருடன் மேடையேறிய தலைவர்கள்! இதோ முழு பட்டியல்
-
மதுராந்தகம் பொதுக்கூட்டத்தில் மோடி விளாசல்: தமிழ் கலாசாரத்தின் எதிரி திமுக என தாக்கு
-
சுதந்திரச் சுடர்: மாவீரன் நேதாஜி
-
கரப்ஷன், மாபியா, கிரைம் மிகுந்த திமுக ஆட்சி; பிரதமர் மோடி காட்டம்
-
அறியாமையை காட்டி அசிங்கப்படும் ராகுல்; பொருளாதார வளர்ச்சியை மீண்டும் குறை சொல்கிறார்!