ராகுல் மீது அதிருப்தி; காங்கிரஸ் கூட்டத்தை புறக்கணித்த சசிதரூர்
புதுடில்லி: ராகுல் மீது ஏற்பட்ட அதிருப்தியின் காரணமாக, கேரள சட்டசபை தேர்தல் தொடர்பாக இன்று நடக்கும் காங்கிரஸ் உயர்மட்ட ஆலோசனைக் கூட்டத்தை அக்கட்சியின் எம்பி சசி தரூர் புறக்கணித்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
கேரளாவின் திருவனந்தரபுரம் தொகுதி காங்கிரஸ் எம்பியாக இருப்பவர் சசி தரூர். இவர் அண்மை காலமாக பிரதமர் மோடியையும், மத்திய அரசின் செயல்பாடுகளையும் புகழ்ந்தும், பாராட்டியும் பேசி வருகிறார். இது காங்கிரஸ் கட்சிக்குள் சலசலப்பை ஏற்படுத்திதோடு, சக காங்கிரஸ் கட்சி நிர்வாகிகள் இவரை கடுமையாக விமர்சித்து வருகின்றனர்.
இந்த சூழலில், பிரதமர் மோடிக்கு அடுத்ததாக கடினமான வேலையை செய்வதாக இந்திய கிரிக்கெட் அணியின் பயிற்சியாளர் கம்பீரை பாராட்டியிருந்தார். இதற்கு ஆதரவாக பாஜவினர் கருத்து தெரிவித்தனர்.
இந்த நிலையில், கேரள சட்டசபைக்கு இந்தாண்டு நடக்கவிருக்கும் தேர்தல் குறித்து ஆலோசிக்க அக்கட்சியின் தேசிய தலைவர் மல்லிகார்ஜூன கார்கே தலைமையில் உயர்மட்ட ஆலோசனைக் கூட்டம் இன்று நடைபெற இருக்கிறது. இந்தக் கூட்டத்தில் காங்கிரஸ் எம்பி ராகுல் மற்றும் கேரள காங்கிரஸ் கட்சி நிர்வாகிகள் கலந்து கொள்ள உள்ளனர். ஆனால், இந்தக் கூட்டத்தை கேரளாவைச் சேர்ந்த முக்கிய எம்பியான சசி தரூர் புறக்கணித்துள்ளார்.
கடந்த ஜனவரி 18ம் தேதி ராகுல் கொச்சிக்கு வந்திருந்த போது, கேரள காங்கிரஸ் தலைமையும், ராகுலும் தனக்கு உரிய மரியாதை வழங்கவில்லை என்ற அதிருப்தியில் சசி தரூர் இருந்து வருகிறார். இதன் காரணமாகவே, அவர் இன்றைய கூட்டத்தை புறக்கணித்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
காங்கிரஸ் சோனியா குடும்பத்தின் சொத்தல்ல.. நீண்ட பாராம்பரியம் உள்ள நாட்டின் பழமையான கட்சி .இதை சோனியா-ராகுல் குடும்பத்திலிருந்து விடுவிக்க உள்ளிருந்தே எதிர்ப்பு காட்ட வேண்டும் போராட வேண்டும் ..அவர்கள் கையிலிருந்து விடுவிக்க வேண்டும்.. காங்கிரஸ் ஒரு நல்ல எதிர் கட்சியாக இருக்கவேண்டும்..நமது ஜன நாயகத்திற்கு அதுதான் நல்லது.. வேறு எந்த கட்சியும் பிஜேபிக்கு நல்ல எதிர் கட்சியாகாது ....இதைத்தான் காங்கிரஸ்குள் சசி தரூர் செய்கிறார். அவர் காங்கிரசிலிருந்து வெளிவரக்கூடாது..
...அவர் வேலை செய்யணுமா
காங்கிரஸில் அனைவரும் ராகுல் கான் மீது அதிருப்தியில்தான் இருக்கிறார்கள் சார்.
காங்கிரஸ் அவரை விலக்கினால் நாட்டுக்கு ஒரு நல்லவர் ஆளும் கட்சியில் சேர்ந்து சேவை செய்ய ஏதுவாக இருக்கும்.
இன்னுமா காங்கிரஸ் ல இருக்கார்
இப்படி தினமும் காங்கிரஸ் தலைமையை பற்றி குறைகூறிக்கொண்டு அந்த கூட்டத்தில் இருப்பதற்கு பதில், வேறு ஒரு நேர்மையான கட்சிக்கு செல்லவேண்டும், அல்லது புதிய கட்சி துவங்கவேண்டும். கேரளா முன்னேற்ற கழகம் - பெயர் கூட ரெடி.
காங்கிரஸ் கட்சி மீண்டெழ ஒரே வழி: சோனியா குடும்பம் அந்த கட்சியிலிருந்து முற்றிலும் விலகவேண்டும்.
பேசாமல், பிஜேபிக்கு சென்று விடுங்கள். ஒரு அமைச்சர் பதவி கிடைக்கும். வெளியுறவு துறை ராஜாங்க அமைச்சர்?மேலும்
-
டபுள் எஞ்சின் எனும் டப்பா எஞ்சின் தமிழகத்தில் ஓடாது!: முதல்வர் ஸ்டாலின்
-
தே.ஜ., கூட்டணி பொதுக்கூட்டத்தில் பிரதமருடன் மேடையேறிய தலைவர்கள்! இதோ முழு பட்டியல்
-
மதுராந்தகம் பொதுக்கூட்டத்தில் மோடி விளாசல்: தமிழ் கலாசாரத்தின் எதிரி திமுக என தாக்கு
-
சுதந்திரச் சுடர்: மாவீரன் நேதாஜி
-
கரப்ஷன், மாபியா, கிரைம் மிகுந்த திமுக ஆட்சி; பிரதமர் மோடி காட்டம்
-
அறியாமையை காட்டி அசிங்கப்படும் ராகுல்; பொருளாதார வளர்ச்சியை மீண்டும் குறை சொல்கிறார்!