ஆன்லைன் வர்த்தகத்தில் ரூ.19.83 லட்சம் மோசடி

தஞ்சாவூர்: தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணத்தை சேர்ந்தவர் வேலவன், 34; தனியார் ஊழியர். டெலிகிராமில், ஜன., 4ம் தேதி, கவிதா என்ற பெயரில், ஆன்லைன் வர்த்தகம் மற்றும் பகுதி நேர வேலை தொடர்பான குறுஞ்செய்தி வந்துள்ளது.

அந்த எண்ணில் வேலவன் தொடர்பு கொண்டார். அப்போது, ஆன்லைன் வர்த்தகத்தில் ஈடுபட்டால், அதிக லாபம் கிடைக்கும் என, தெரிவிக்கப்பட்டது. இதை உண்மை என நம்பிய வேலவன், கொடுக்கப்பட்ட சில பணிகளை செய்துள்ளார். முதற்கட்டமாக, 44,000 ரூபாய், அவரது வங்கி கணக்கிற்கு வந்துள்ளது.

இந்நிலையில், மர்ம நபர் கூறிய பல்வேறு வங் கி கணக்குகளில், ஜன., 9ம் தேதி 19.83 லட்சம் ரூபாயை, வேலவன் அனுப்பி உள்ளார். பின், அவர்களை, வேலவனால் தொடர்பு கொள்ள முடியவில்லை. இது குறித்து தஞ்சாவூர் சைபர் கிரைம் போலீசில் நேற்று புகாரளித்தார்.

விசாரணையில், வேலவன் பணம் செலுத்திய வங்கி கணக்குகள், குஜராத், மத்தியபிரதேசம், மஹாராஷ்டிரா, உத்தரபிர தேசம், பஞ்சாப் உள்ளிட்ட மாநில வங்கி கணக்குகள் என, தெரிய வந்தது. அந்த கணக்குகளில், 82,000 ரூபாயை, சைபர் கிரைம் போலீசார் முடக்கி, தொடர்ந்து விசாரிக் கின்றனர்.

Advertisement