படுக்கை அறை வடிவமைப்பில் கவனிக்க வேண்டிய பாதுகாப்பு வழிமுறைகள்!
எவ்வளவு செலவு செய்து வீடு கட்டினாலும் அதில் நிம்மதியான துாக்கம் கிடைக்க வேண்டும் என்பது தான் பெரும்பாலான மக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது. குறிப்பாக, ஒரு வீட்டை கட்டி முடிக்கும் நிலையில், படுக்கை அறைக்கான அடிப்படை அளவுகளை தான் பலரும் கணக்கு பார்க்கின்றனர்.
பொதுவான நடைமுறை என்ற அடிப்படையில், இரண்டு அல்லது மூன்று படுக்கை அறை வீடுகளை பலரும் கட்டுகின்றனர். இதில் ஒரு படுக்கை அறையை மாஸ்டர் பெட்ரூம் என்ற அடிப்படையில் பெரிதாக கட்டுவது வழக்கமாக அமைந்துள்ளது.
கட்டடத்துக்கு வரைபடம் தயாரிப்பது முதல், கட்டுமான பணிகளை முடிக்கும் வரை, படுக்கை அறை தொடர்பான அளவுகள் விஷயத்தில் மட்டுமே மக்கள் கவனம் செலுத்துகின்றனர். அதன் உட்புற அமைப்பு எப்படி இருக்க வேண்டும் என்பதை கவனமாக பார்ப்பதில்லை.
இதனால், கட்டுமான பணிகள் முடிந்த நிலையில், படுக்கை அறையில் எந்த இடத்தில் கட்டில் போடுவது, எங்கு அலமாரி அமைப்பது ஆகிய விஷயங்களில் குழப்பம் ஏற்படுகிறது. படுக்கை அறைக்கான வரைபடம் தயாரிக்கும் போதே அதன் உட்புற அமைப்பையும் கருத்தில் கொள்ள வேண்டும்.
இதில் பாதுகாப்பு அடிப்படையிலும், அமைதியான சூழல் இருக்க வேண்டும் என்பது போன்ற விஷயங்களை கருத்தில் வைத்து செயல்பட வேண்டும். படுக்கை அறையில் ஜன்னல் இருக்க வேண்டியது அவசியம் தான். ஆனால், அதை ஒட்டி கட்டிலின் தலைப்பகுதி அமைய கூடாது.
கட்டிலின் தலைப்பகுதி, உறுதியான சுவரை ஒட்டி அமைய வேண்டியது அவசியம். அதே நேரம், அந்த சுவருக்கு வெளிப்புறம், சமையலறை போன்ற சத்தம் ஏற்படுத்தும் பயன்பாடு உள்ள விஷயங்கள் அமையாமல் பார்த்து கொள்ள வேண்டியதும் அவசியமாகிறது.
வெளியில் இருந்து வீட்டுக்குள் வரும் போது, படுக்கை அறையின் வாயில் நேரடியாக தெரியும்படி அமைய கூடாது. அடு மட்டுமல்லாது, படுக்கை அறையின் வாயிலில் நின்று பார்க்கும் போது அதற்கு நேராக கட்டிலின் கால் பகுதி அமைவதையும் தவிர்க்க வேண்டும்.
படுக்கை அறையில் வாசலுக்கும், ஜன்னலுக்கும் இடையிலான நேர்கோட்டில் குறுக்காக கட்டில் அமைவது, ஓரளவுக்கு பாதுகாப்பு உணர்வை கொடுக்கும். இது மட்டமல்லாது, படுக்கை அறையில் தொலைக்காட்சி அமைக்க விரும்பினால், அது கட்டிலின் தலைப்பகுதிக்கு நேர் எதிர்திசையில் இருக்க வேண்டும்.
தொலைக்காட்சி பக்கவாட்டில் இருந்தால், பயன்பாட்டு நிலையில் பல்வேறு பிரச்னைகள் ஏற்படக்கூடும். இது போன்ற அடிப்படை விஷயங்களை கவனத்தில் வைத்து வரைபடம் தயாரித்தால் நிம்மதியான துாக்கத்தை உறுதி செய்ய முடியும் என்கின்றனர் கட்டுமான வடிவமைப்பாளர்கள்.
வீடுகளில் படுக்கை அறையில் ஜன்னல் இருக்க வேண்டியது அவசியம் தான் என்றாலும், அதை ஒட்டி கட்டிலின் தலைப்பகுதி அமைய கூடாது என்பதில் கவனமாக இருங்கள்.
மேலும்
-
குற்றவாளிகளை காப்பாற்ற மட்டுமே ஆட்சி நடத்தும் திமுக: அண்ணாமலை குற்றச்சாட்டு
-
தமிழகத்தில் நாளை 9 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு: வானிலை மையம் தகவல்
-
வர்த்தக ஒப்பந்தங்களால் இளைஞர்களுக்குப் புதிய வேலைவாய்ப்பு; பிரதமர் மோடி பெருமிதம்
-
'போக்சோ'வில் கைதானவருக்கு சாகும் வரை ஆயுள் தண்டனை
-
நிதி பெற்று தருவதாக மோசடி; லக்னோ வாலிபர் கைது
-
கருப்பு நிறத்தில் மாறிய கடற்கரை: திருச்செந்துாரில் பக்தர்கள் அதிர்ச்சி