எந்த நேரத்திலும் எதுவும் மாறும்; தேர்தலுக்கு இன்னும் நிறைய காலம் இருக்கிறது: பிரேமலதா

44


சென்னை: '' தேர்தலுக்கு இன்னும் நிறைய காலம் இருக்கிறது,'' என தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா தெரிவித்துள்ளார்.

சென்னை விமான நிலையத்தில் நிருபர்களிடம் பிரேமலதா கூறியதாவது: எல்லோரும் தொகுதி அறிவித்துவிட்டார்கள், வேட்பாளர்கள் அறிவித்துவிட்டார்கள் என கேட்கிறீர்கள். தேர்தலுக்கு இன்னும் நிறைய நேரம் இருக்கிறது. பிப்ரவரி 28ம் தேதிக்கு பிறகு தான் தேர்தல் தேதி அறிவிக்க போகிறார்கள். தேமுதிக எங்களது குழந்தை. அவர்களுக்கு என்ன, எப்பொழுது நல்லது பண்ண வேண்டும் என்று ஒரு அம்மாவாக எனக்கு கடமைகள், பொறுப்பு அதிகமாக இருக்கிறது.



உரிய நேரத்தில் எல்லோரும் போற்றும் ஒரு நல்ல கூட்டணியை அமைப்போம். ரகசியம் ஏதும் கிடையாது. இந்த முறை வெளிப்படையாக தான் கூட்டணி அமைப்போம். கூட்டணி முடிவு செய்யப்பட்டால் முதலில் மீடியாக்களை அழைத்து அறிவிப்பேன். தேஜ கூட்டணியில் இணைவது குறித்தும் இறுதி முடிவு எடுக்கவில்லை.


எந்த நேரத்திலும் எதுவும் மாறலாம். யார் வேண்டும் என்றாலும் எந்த கூட்டணியும் அமைக்கலாம். தமிழக மக்களுக்கு நல்லது நடக்கும் வகையில், தெளிவான சிந்தனையுடன் நல்ல முடிவு எடுப்போம். தேர்தலுக்கு பிறகு ஒரு ஆட்சி வர தான் போகிறது. 2026ல் நல்ல ஆட்சி அமைய வேண்டும். அது தான் எங்களது கோரிக்கை. நல்லதே நடக்கும். இவ்வாறு பிரேமலதா கூறினார்.

Advertisement