தங்கம் விலை தொடர்ந்து ஏறுமுகம்; சவரனுக்கு ரூ.560 அதிகரிப்பு
சென்னை: சென்னையில் இன்று (ஜனவரி 24) 22 காரட் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு 560 ரூபாய் அதிகரித்து ஒரு சவரன் ஒரு லட்சத்து 16 ஆயிரத்து 960 ரூபாய்க்கு விற்பனை ஆகிறது.
சர்வதேச முதலீட்டாளர்களும், பல நாடுகளும் பாதுகாப்பு கருதி, தங்கத்தில் அதிக முதலீடு செய்வதால், அதன் விலை தொடர்ந்து உயர்ந்து வருகிறது. வெள்ளி மீதும் முதலீடுகள் அதிகரித்துள்ளதால் அதன் விலை உயர்ந்துள்ளது. தமிழகத்தில் நேற்று முன்தினம் (ஜனவரி 22) ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு 1,720 ரூபாய் குறைந்து ஒரு சவரன் ஒரு லட்சத்து 13 ஆயிரத்து 600 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது.
கிராமுக்கு 215 ரூபாய் சரிந்து ஒரு கிராம் 14,200 ரூபாய்க்கு விற்பனை ஆனது. வெள்ளி விலை கிராமுக்கு 5 ரூபாய் குறைந்து ஒரு கிராம் 345 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது. கிலோவுக்கு 5 ஆயிரம் ரூபாய் குறைந்து ஒரு கிலோ 3 லட்சத்து 40 ஆயிரம் ரூபாய்க்கு விற்பனை ஆனது.
நேற்றைய நிலவரம்
நேற்று (ஜனவரி 23) 22 காரட் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு 3600 ரூபாய் அதிகரித்து ஒரு சவரன் ஒரு லட்சத்து 17 ஆயிரத்து 200 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது. கிராமுக்கு 450 ரூபாய் அதிகரித்து ஒரு கிராம் 14 ஆயிரத்து 650 ரூபாய்க்கு விற்பனை ஆனது.
வெள்ளி விலையும் வரலாறு காணாத புதிய உச்சத்தை தொட்டது. வெள்ளி விலை கிராமுக்கு 20 ரூபாய் அதிகரித்து ஒரு கிராம் 360 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது. கிலோவுக்கு 20 ஆயிரம் ரூபாய் அதிகரித்து ஒரு கிலோ 3 லட்சத்து 60 ஆயிரம் ரூபாய்க்கு விற்பனை ஆனது.
மாலையில், தங்கம் கிராமுக்கு 100 ரூபாய் குறைந்து, 14,550 ரூபாய்க்கு விற்பனையானது. சவரனுக்கு 800 ரூபாய் சரிவடைந்து, 1,16,400 ரூபாய்க்கு விற்கப்பட்டது. நேற்று ஒரே நாளில் சவரனுக்கு 2,800 ரூபாய் உயர்ந்தது.
இன்றைய நிலவரம்
இந்நிலையில் இன்று (ஜனவரி 24) 22 காரட் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு 560 ரூபாய் அதிகரித்து ஒரு சவரன் ஒரு லட்சத்து 16 ஆயிரத்து 960 ரூபாய்க்கு விற்பனை ஆகிறது. கிராமுக்கு 70 ரூபாய் அதிகரித்து ஒரு கிராம் 14 ஆயிரத்து 620 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.
வெள்ளி விலை கிராமுக்கு 10 ரூபாய் உயர்ந்து ஒரு கிராம் 355 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. கிலோவுக்கு 10 ஆயிரம் ரூபாய் உயர்ந்து ஒரு கிலோ 3 லட்சத்து 55 ஆயிரம் ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. தங்கம், வெள்ளி விலை வரலாறு காணாத வகையில் புதிய உச்சம் தொட்டு வருகிறது.
கடந்த கால தங்கம் விலை அறிய இங்கே கிளிக் செய்யவும்
இதற்கு நீங்கள் பிரதமர் மோடியை குறை சொல்லுவது தவறு அவர் என்ன செய்வார் சென்னை மதுராந்தகம் மீட்டிங் இல் பிஸி , பெண்ணை பெற்றவர்கள் கவலை படுங்கள்
தங்கம் விலை ஏறினாலும் விற்பனை குறைய வில்லைமேலும்
-
குற்றவாளிகளை காப்பாற்ற மட்டுமே ஆட்சி நடத்தும் திமுக: அண்ணாமலை குற்றச்சாட்டு
-
தமிழகத்தில் நாளை 9 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு: வானிலை மையம் தகவல்
-
வர்த்தக ஒப்பந்தங்களால் இளைஞர்களுக்குப் புதிய வேலைவாய்ப்பு; பிரதமர் மோடி பெருமிதம்
-
'போக்சோ'வில் கைதானவருக்கு சாகும் வரை ஆயுள் தண்டனை
-
நிதி பெற்று தருவதாக மோசடி; லக்னோ வாலிபர் கைது
-
கருப்பு நிறத்தில் மாறிய கடற்கரை: திருச்செந்துாரில் பக்தர்கள் அதிர்ச்சி