ஆபத்தான நிலையில் உள்ள நோயாளிகளுக்கு மறுவாழ்வளிக்கும் அப்போலோ மருத்துவமனையின் இதயம் மற்றும் நுரையீரல் மாற்று அறுவை சிகிச்சை திட்டம்

1

● 600-க்கும் மேற்பட்ட இதயம் மற்றும் நுரையீரல் மாற்று அறுவைசிகிச்சைகள் மற்றும் 1,000-க்கும் மேற்பட்ட எக்மோ (ECMO) சிகிச்சைகள்.

● அதிக உயிர்பிழைப்பு விகிதத்துடன் சிறப்பான சிகிச்சை பலன்களை வழங்கி, இதயம் மற்றும் நுரையீரல் செயலிழப்பு சிகிச்சையில் சென்னை அப்போலோ மருத்துவமனை இந்தியாவின் தலைசிறந்த மருத்துவ மையமாகத் திகழ்கிறது.

சென்னை அப்போலோ மருத்துவமனை, இதயம் மற்றும் நுரையீரல் நோய்க்கான சிகிச்சையில் தேசிய அளவில் முக்கிய சாதனையை நிகழ்த்தியுள்ளது. 600-க்கும் மேற்பட்ட இதயம் மற்றும் நுரையீரல் மாற்று அறுவை சிகிச்சைகள், 1,000-க்கும் மேற்பட்ட எக்மோ (ECMO) சிகிச்சைகள், 2,000-க்கும் மேற்பட்ட நோயாளிகளுக்குத் தொடர் சிகிச்சை மற்றும் பராமரிப்பு, 250-க்கும் மேற்பட்ட செயற்கை இதய பம்ப் (LVAD) சிகிச்சைகள், 250-க்கும் மேற்பட்ட நுரையீரல் ரத்த உறைவு நீக்க சிகிச்சைகளை, இம்மருத்துவமனையின் அனுபவமிக்க உறுப்புமாற்று சிகிச்சை குழு வெற்றிகரமாக செய்திருக்கிறது. இதன் மூலம் இந்தியாவின் மிகச் சிறந்த உறுப்பு மாற்று சிகிச்சை மையமாக சென்னை அப்போலோ மருத்துவமனை திகழ்கிறது.

மருந்துகளால் குணப்படுத்த முடியாத இறுதி நிலை இதயம் மற்றும் நுரையீரல் பாதிப்புகளுக்கு, அப்போலோ மருத்துவமனை நவீன தீர்வு அளிக்கிறது. நோயாளியின் தேவைக்கு ஏற்ப உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை அல்லது செயற்கை இதயக் கருவிகள் மூலம் சான்று அடிப்படையிலான சிறப்பு சிகிச்சை அளித்து, அவர்களின் உயிரைக் காக்கும் சேவையை அப்போலோ வழங்குகிறது.

நுரையீரல் தமனிகளில் ஏற்படும் நாள்பட்ட ரத்த உறைவுகளை அறுவை சிகிச்சை மூலம் அகற்றும் நுரையீரல் எண்டார்டெரெக்டோமி ((Pulmonary Endarterectomy - PEA) போன்ற மிகச் சிக்கலான சிகிச்சைகளையும் இந்த மருத்துவக் குழு வெற்றிகரமாக மேற்கொண்டு வருகிறது.

இந்தச் சாதனையை விளக்கும் செய்தியாளர் சந்திப்பில், சிகிச்சை பெற்று மறுவாழ்வு பெற்ற நோயாளிகள் தங்கள் அனுபவங்களைப் பகிர்ந்துகொண்டனர். திரு. ராஜா சிவகுருநாதன் (59): 48 நாட்கள் எக்மோ (ECMO) சிகிச்சையில் இருந்த இவர், அவசர இரட்டை நுரையீரல் மாற்று அறுவை சிகிச்சை மூலம் உயிர் பிழைத்தார். திரு. சரவணன் (45): திடீர் நுரையீரல் செயலிழப்பு ஏற்பட்டது. இரண்டு வாரங்கள் நீடித்த உயிர்காக்கும் இயந்திர ஆதரவு சிகிச்சைக்குப் பிறகு, நுரையீரல் மாற்று அறுவைசிகிச்சை செய்யப்பட்டு குணமடைந்தார். திரு. ராதே ஷியாம் ரகுவன்ஷி (72): உடல்நிலை மோசமானதால் விமானம் மூலம் சென்னைக்கு கொண்டு வரப்பட்டு, மேம்பட்ட ஆதரவுக்கு பிறகு இரட்டை நுரையீரல் மாற்று அறுவை சிகிச்சை மூலம் காப்பாற்றப்பட்டார்.

டாக்டர் ஸ்ரீனிவாஸ் ராஜகோபாலா, நுரையீரல் மற்றும் நுரையீரல் மாற்று அறுவை சிகிச்சை பிரிவுத் தலைவர் கூறியதாவது: "தீவிர நுரையீரல் செயலிழப்பின் போது, சரியான நேரத்தில் எக்மோ சிகிச்சையைத் தொடங்குவது நோயாளியின் உயிரைக் காக்க மிக முக்கியம். இது நோயாளியை நிலைப்படுத்தவும், மாற்று அறுவை சிகிச்சைக்குத் தயாராகவும் அவகாசம் அளிக்கிறது. எங்களின் நோக்கம் நோயாளிகளின் உயிரைக் காப்பது மட்டுமல்ல, அவர்கள் மீண்டும் இயல்பு வாழ்க்கைக்கு திரும்புவதை உறுதி செய்வதே ஆகும்."

இறுதி நிலை இதய செயலிழப்புடன் ஆபத்தான நிலையிலுள்ள நோயாளிகளுக்கு அப்போலோ மருத்துவமனை எப்படி சிறப்பான சிகிச்சை விளைவுகளை வழங்குகிறது என்பது குறித்து இதய செயலிழப்பு மற்றும் இதய உறுப்புமாற்று சிகிச்சைப் பிரிவின் கிளினிக்கல் லீட் டாக்டர். ஆர். ரவிக்குமார் விளக்கமளித்தார். “அப்போலோ மருத்துவமனையில் உள்ள இக்குழு அதன் வளர்ச்சியடைந்து வரும் தேசிய செயல்திட்டத்தின் மூலம் உறுப்புமாற்று சிகிச்சைக்கு காத்திருப்பு பட்டியலில் உள்ளவர்களுக்கு ஏற்படும் உயிரிழப்பையும், காத்திருப்பு காலஅளவையும் குறைப்பதில் வெற்றி பெறுவதற்காக ஒரு தனித்துவமான மருத்துவ சேவையை ஏற்கனவே வழங்கி வருகிறது. சென்னை மற்றும் பெங்களூரு ஆகிய நகரங்களுக்கும் அப்பால் இயங்கி வரும் அப்போலோவின் பிற மருத்துவனைகளிலும் இத்திட்டத்தை செயல்படுத்த இயலும் என்று நாங்கள் நம்புகிறோம்.” என்று அவர் கூறினார்.

இறுதி நிலை இதய செயலிழப்புடன் ஆபத்தான நிலையிலுள்ள நோயாளிகளுக்கு அப்போலோ மருத்துவமனை எப்படி சிறப்பான சிகிச்சை விளைவுகளை வழங்குகிறது என்பது குறித்து இதய செயலிழப்பு மற்றும் இதய உறுப்புமாற்று சிகிச்சைப் பிரிவின் கிளினிக்கல் லீட் டாக்டர். ஆர். ரவிக்குமார் விளக்கமளித்தார். “அப்போலோ மருத்துவமனையில் உள்ள இக்குழு அதன் வளர்ச்சியடைந்து வரும் தேசிய செயல்திட்டத்தின் மூலம் உறுப்புமாற்று சிகிச்சைக்கு காத்திருப்பு பட்டியலில் உள்ளவர்களுக்கு ஏற்படும் உயிரிழப்பையும், காத்திருப்பு காலஅளவையும் குறைப்பதில் வெற்றி பெறுவதற்காக ஒரு தனித்துவமான மருத்துவ சேவையை ஏற்கனவே வழங்கி வருகிறது. சென்னை மற்றும் பெங்களூரு ஆகிய நகரங்களுக்கும் அப்பால் இயங்கி வரும் அப்போலோவின் பிற மருத்துவனைகளிலும் இத்திட்டத்தை செயல்படுத்த இயலும் என்று நாங்கள் நம்புகிறோம்.” என்று அவர் கூறினார்.

டாக்டர் குமுத் குமார் திட்டால், இதயம் மற்றும் நுரையீரல் மாற்று அறுவை சிகிச்சைத் துறைத் தலைவர் கூறியதாவது: "இதயம் மற்றும் நுரையீரல் செயலிழப்பு உள்ள நோயாளிகள், நிலைமை மோசமாவதற்கு முன்பே மாற்று அறுவை சிகிச்சைக்கான ஆலோசனைகளைப் பெறுவது அவசியம். ஆரம்ப நிலையிலேயே வரும்போது சிகிச்சை முடிவுகள் சிறப்பாக இருக்கும். வயது ஒரு தடையல்ல; முறையான மதிப்பீடு, துல்லியமான அறுவை சிகிச்சை மற்றும் அறுவை சிகிச்சைக்குப் பிந்தைய கவனிப்பு ஆகியவை நீண்ட கால நல்வாழ்வை உறுதி செய்யும்."

இந்த நிகழ்ச்சியில் அப்போலோ மருத்துவமனை குழுமத்தின் (சென்னை மண்டலம்) தலைமைச் செயல் அதிகாரி டாக்டர் இளங்குமரன் கலியமூர்த்தி அவர்களும் கலந்து கொண்டார்.

இந்தியாவில் இதயம் மற்றும் நுரையீரல் நோய்களின் தாக்கம் அதிகரித்து வரும் நிலையில், நவீன தொழில்நுட்பத்தின் பயன்பாடு, கனிவான, திறன்மிக்க சிகிச்சை ஆகியவற்றின் மூலம் உறுப்பு மாற்று சிகிச்சையில் அப்போலோ மருத்துவமனை முதலிடம் வகிக்கிறது.

இதயவியல், நுரையீரல் மருத்துவம், அறுவை சிகிச்சை, தீவிர சிகிச்சை மற்றும் மறுவாழ்வு என அனைத்துத் துறைகளையும் உள்ளடக்கிய ஒரு ஒருங்கிணைந்த சிகிச்சை முறையை அப்போலோ பின்பற்றுகிறது. இது நோயாளிகள் மருத்துவமனையில் இருந்து வீடு திரும்பிய பிறகும் தொடர்கிறது.

எக்மோ தொழில்நுட்பம்: இதயம் அல்லது நுரையீரல் செயல்படாத போது, இந்த இயந்திரம் தற்காலிகமாக அந்த உறுப்புகளின் பணியைச் செய்கிறது. இது ரத்தத்தில் ஆக்சிஜனைச் செலுத்தி, பாதிக்கப்பட்ட உறுப்புகள் ஓய்வெடுக்கவும் குணமடையவும் உதவுகிறது. அல்லது மாற்று அறுவை சிகிச்சை செய்யும் வரை நோயாளியை உயிருடன் வைத்திருக்க இது ஒரு பாலமாக செயல்படுகிறது. நுரையீரல் ஆதரவிற்காக வெனோ-சிரை எக்மோ (VV-ECMO) மற்றும் இதயம் அல்லது ஒருங்கிணைந்த இதயம்-நுரையீரல் செயலிழப்பிற்காக வெனோ-ஆர்ட்டீரியல் எக்மோ (VA-ECMO) சிகிச்சை செயல்முறைகளை இத்திட்டம் ஒருங்கிணைக்கிறது.

அப்போலோ மருத்துவமனைகள் குறித்து: இதன் நிறுவனர் மற்றும் தலைவர் டாக்டர் பிரதாப் ரெட்டி, 1983-ல் சென்னையில் முதல் மருத்துவமனையைத் திறந்தபோது சுகாதாரத் துறையில் ஒரு புரட்சியை அப்போலோ ஏற்படுத்தியது. இன்று, அப்போலோ உலகின் மிகப்பெரிய ஒருங்கிணைந்த சுகாதாரத் தளங்களில் ஒன்றாகும். இது 74 மருத்துவமனைகளில் 10,400 படுக்கைகள், 6,600+ மருந்தகங்கள், 264 கிளினிக்குகள், 2,182 நோயறிதல் மையங்கள் மற்றும் 800+ டெலிமெடிசின் மையங்களைக் கொண்டுள்ளது. உலகின் முன்னணி இதய சிகிச்சை மையங்களில் ஒன்றாகத் திகழும் அப்போலோ, 3,00,000-க்கும் மேற்பட்ட ஆஞ்சியோபிளாஸ்டிகள் மற்றும் 2,00,000-க்கும் மேற்பட்ட அறுவை சிகிச்சைகளை வெற்றிகரமாக இதுவரை மேற்கொண்டுள்ளது.

நோயாளிகளுக்கு உலகின் சிறந்த சிகிச்சை கிடைப்பதை உறுதி செய்ய, அதிநவீன தொழில்நுட்பங்கள், உபகரணங்கள் மற்றும் சிகிச்சை நெறிமுறைகளை செயல்படுத்த அப்போலோ தொடர்ந்து ஆராய்ச்சி மற்றும் புத்தாக்க செயல்பாடுகளை முதலீடு செய்து வருகிறது. அப்போலோவின் 1,20,000 குடும்ப உறுப்பினர்கள் சிறப்பான சிகிச்சையை அளிப்பதற்கும், உலகை நாம் கண்டதை விடச் சிறந்ததாக மாற்றி எதிர்கால தலைமுறைக்கு இட்டுச் செல்லவும் அர்ப்பணிப்பு உணர்வுடன் சேவையாற்றி வருகின்றனர்.

Advertisement