அஜித் பவாருடன் பறக்கப்போகிறேன்; விமான பணிப்பெண் இறப்புக்கு முன் கடைசியாக சொன்ன வார்த்தை!
மும்பை: 'அப்பா..! நான் அஜித் பவார் சாருடன் பறக்கப்போகிறேன்' என ஆனந்தமாக கூறிவிட்டு சென்ற மகள் தற்போது உயிரோடு இல்லை என விமான பணிப்பெண் பிங்கி மாலியின் தந்தை கண்ணீர் மல்க தெரிவித்து உள்ளார்.
மஹாராஷ்டிரா துணை முதல்வர் அஜித் பவாரை ஏற்றிச் சென்ற சார்ட்டர்டு லியர்ஜெட் விமானம் இன்று காலை விபத்துக்குள்ளானதில், இரண்டு இளம் பெண்கள், கேபின் குழு உறுப்பினர் பிங்கி மாலி, 29, மற்றும் பைலட்டுகள் கேப்டன் சுமித் கபூர், கேப்டன் ஷாம்பவி பதக் ஆகியோர் கொல்லப்பட்டவர்களில் அடங்குவர்.
விபத்து நடந்த சிறிது நேரத்திலேயே, பிங்கி மாலிக்கும் அவரது தந்தை ஷிவ்குமார் மாலிக்கும் இடையிலான இறுதி உரையாடல் வெளிவந்துள்ளது. அதில் அவர் நாளை தந்தையிடம் பேசுவதாக உறுதியளித்தார். மும்பையின் வோர்லியில் வசிக்கும் பிங்கி மாலி, தனது தந்தையிடம், மறுநாள் அஜித் பவாருடன் பாராமதிக்குப் பயணம் செய்வதாகக் கூறினார்.
அப்பா, நான் துணை முதல்வர் அஜித் பவாருடன் பாராமதிக்கு விமானத்தில் செல்கிறேன். அவரை இறக்கிவிட்ட பிறகு, நான் ஹோட்டலை அடைந்ததும் உங்களிடம் பேசுவேன்..." என்று சிவகுமார் தனது மகளுடனான கடைசி உரையாடலை நினைவு கூர்ந்தார்.
@quote@பிங்கி மாலி யார்?quote
மும்பையைச் சேர்ந்த கேபின் குழு உறுப்பினரான பிங்கி மாலி, தனது குடும்பத்துடன் வோர்லியில் வசித்து வந்தார், மேலும் அந்த வாடகை விமானத்தில் பணியில் இருந்தார். கிழக்கு உத்தரபிரதேசத்தின் ஜான்பூர் மாவட்டத்தில் உள்ள பைன்சா கிராமத்தைச் சேர்ந்த பிங்கி, விமானப் போக்குவரத்துத் துறையில் சேருவதற்கு முன்பு தானேயில் பள்ளிப் படிப்பையும் உயர்கல்வியையும் முடித்திருந்தார்.
மேலும்
-
வங்கதேசத்தில் இருந்து இடம்பெயர்ந்த 99 ஹிந்து குடும்பங்களுக்கு மறுவாழ்வு
-
மகாத்மாவின் சுதேசி கொள்கையே தற்சார்பு இந்தியாவின் அடிப்படை தூண்; பிரதமர் மோடி
-
விலை மதிப்பில்லா அறிவாற்றலை மலிவாக ஏற்றுமதி செய்யும் நிலை; ஸ்ரீதர் வேம்பு வேதனை
-
போலி தொழுநோய் சான்றிதழ் வழங்கி ஆசிரியரான 27 பேர் மீது விசாரணை
-
ஈரானின் புரட்சிகர காவல் படை ஒரு பயங்கரவாத அமைப்பு: ஐரோப்பிய யூனியன் அறிவிப்பு
-
விற்பனை கூடத்தில் கொப்பரை ஏலம்: கிலோ ரூ. 201க்கு விற்பனை