வங்கதேசத்தில் இருந்து இடம்பெயர்ந்த 99 ஹிந்து குடும்பங்களுக்கு மறுவாழ்வு

லக்னோ: வங்கதேசத்தில் இருந்து இடம்பெயர்ந்த 99 ஹிந்து குடும்பங்களுக்கு மறுவாழ்வு அளிக்க உத்தரபிரதேச அரசு முடிவு செய்துள்ளது.

உத்தரபிரதேச அமைச்சரவைக் கூட்டத்திற்குப் பிறகு நிதியமைச்சர் சுரேஷ் குமார் கண்ணா கூறியதாவது; மீரட் மாவட்டத்தின் மவானா பகுதியில் 99 ஹிந்து குடும்பங்கள் சட்டவிரோதமாக வசித்து வருகின்றனர். தேசிய பசுமைத் தீர்ப்பாயத்தின் உத்தரவின்படி, அவர்கள் இடமாற்றம் செய்யப்படுவார்கள்.

மறுவாழ்வுத் திட்டத்தின் கீழ், கான்பூர் தேஹாத் மாவட்டத்தின் பைன்சாயா கிராமத்தில், மறுவாழ்வுத் துறையின் பெயரில் பதிவு செய்யப்பட்டுள்ள 27.51 ஏக்கர் நிலத்தில் 50 குடும்பங்கள் குடியேற்றப்படுவார்கள். மீதமுள்ள 49 குடும்பங்கள் தாஜ்பூர் தர்சௌலி கிராமத்தில் 26.01 ஏக்கர் நிலத்தில் தங்க வைக்கப்படுவார்கள், இவ்வாறு அவர் கூறினார்.

வங்கதேசத்தில் ஹிந்துக்கள் தொடர்ந்து தாக்கப்பட்டு வரும் நிலையில், உத்தரபிரதேச அரசின் இந்த நடவடிக்கையை ஹிந்து அமைப்புகள் பாராட்டி வருகின்றன.

Advertisement