மகாத்மாவின் சுதேசி கொள்கையே தற்சார்பு இந்தியாவின் அடிப்படை தூண்; பிரதமர் மோடி
புதுடில்லி: மகாத்மாவின் சுதேசி கொள்கையே வளர்ந்த மற்றும் தற்சார்பு கொண்ட இந்தியாவிற்கான நமது உறுதிப்பாட்டின் அடிப்படைத் தூண் என்று பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
மகாத்மா காந்தியின் நினைவு தினத்தையொட்டி அவர் வெளியிட்ட எக்ஸ் தளப்பதிவில்; தேசத்தந்தை மகாத்மா காந்தியின் நினைவு நாளில் அவருக்கு எனது வணக்கங்கள். எப்போதும் சுதேசி கொள்கைக்கு மிகுந்த முக்கியத்துவம் அளித்தார். இதுவே வளர்ந்த மற்றும் தற்சார்பு கொண்ட இந்தியாவிற்கான நமது உறுதிப்பாட்டின் அடிப்படைத் தூணாகும். அவரது ஆளுமையும் செயல்களும், நாட்டு மக்கள் கடமையின் பாதையில் நடக்க எப்போதும் தொடர்ந்து ஊக்கமளிக்கும், இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.
பாஜ மாநில முன்னாள் தலைவர் அண்ணாமலை வெளியிட்ட அறிக்கை; அகிம்சையும், வாய்மையும், அறவழியும் ஆயுதமாகக் கொண்டு, இந்திய சுதந்திரப் போராட்டத்தை முன்னெடுத்துச் சென்ற, மகாத்மா காந்தியடிகள் நினைவு தினம் இன்று.
அமைதி, சகிப்புத்தன்மை, ஒருமைப்பாடு, கலாச்சாரப் பாதுகாப்பு முதலானவற்றைப் போதித்த அவரது தியாகங்களைப் போற்றி வணங்குகிறோம். மகாத்மாவின் உயரிய போதனைகளைப் பின்பற்றி, அவருக்குப் புகழ் சேர்ப்போம், இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
mk gandhi போல ஒரு wily ஏமாற்று பேர்வழியை எத்தனை காலம்தான் மக்கள் மேல் role model ஆக திணித்து வருவார்கள் ?
மாண்புமிகு பாரத பிரதமர் திரு.மோடி அவர்களே, தாங்கள் மகாத்மா காந்திஜி மீது உண்மையான பற்று கொண்டிருந்தால், 100 நாள் வேலை திட்டத்தின் பெயரை மாற்றாதீர்கள், அத்திட்டம் காந்திஜி பெயரிலேயே இருக்கட்டுமே.
அதே காந்தி பெயரில் நடக்கும் திராவிட கொள்ளையை தட்டி கேட்க வக்கில்லையே வாசன்
காந்திய கொள்கையில் "மேக் இன் இண்டியா" மற்றும் "தற்சார்பு இந்தியா" என்பதை மட்டும் ஏற்றுக்கொண்டார்.
எல்லோருடனும்.ஃப்ரீ ட்ரேட் அக்ரிமெண்ட் போட்டு ஏற்றுமதி செஞ்சா உட்டுருவாங்களா?மேலும்
-
திருடப்பட்ட சோழர் கால சிலைகள்; இந்தியாவிடம் மீண்டும் ஒப்படைக்கிறது அமெரிக்கா
-
பிப்ரவரி 5ல் கூடுகிறது தமிழக அமைச்சரவை; இடைக்கால பட்ஜெட் குறித்து ஆலோசனை நடத்த திட்டம்
-
திமுகவை வெளியேற்றி தமிழகத்தை மீட்கும் தினம் தொலைவில் இல்லை; நயினார் நாகேந்திரன்
-
காங்கிரஸூடன் எந்த மோதல் போக்கும் இல்லை; சொல்கிறார் கனிமொழி
-
சென்னையில் பீஹார் தம்பதி கொடூர கொலை; 4 நாட்களுக்கு பின் தேடப்பட்ட பெண் உடல் மீட்பு
-
எங்களுக்கும் திருப்பி அடிக்க தெரியும்: திமுகவுக்கு காங். எம்பி மாணிக்கம் தாக்கூர் பதில்