குடியிருப்பு பகுதியில் ராஜநாகம் -மீட்டு விடுவித்த வனத்துறையினர்

பந்தலுார்: பந்தலுார் அருகே தேவாலா குடியிருப்பு பகுதியில் புகுந்த, 12 அடி நீள ராஜநாகம் மீட்டு வனப்பகுதியில் விடுவிக்கப்பட்டது.

பந்தலுார் அருகே தேவாலா மூச்சுக்குன்னு குடியிருப்பு பகுதியில், ராஜநாகம் ஒன்று இருப்பதாக வனத்துறைக்கு தகவல் கிடைத்தது. தேவாலா வனவர் சுரேஷ்குமார் தலைமையிலான வனக்குழுவினர், அப்பகுதிக்கு சென்று குடியிருப்பு அருகே காணப்பட்ட, 12 அடி நீளமுள்ள ராஜநாகத்தை, பாதுகாப்பாக மீட்டனர். தொடர்ந்து, ராஜநாகத்தை எடுத்து வந்து, கிளன்ராக் அடர்த்தியான வனப்பகுதியில் விடுவித்தனர். இதனால், கிராம மக்கள் நிம்மதி அடைந்தனர்.

Advertisement