காரில் தீப்பிடித்து எரிந்ததால் கோவை ரோட்டில் பரபரப்பு

பொள்ளாச்சி: பொள்ளாச்சி அருகே, தேசிய நெடுஞ்சாலையில் திடீரென கார் தீப்பிடித்து எரிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

கோவையை சேர்ந்த வேலுச்சாமியும், அவரது மனைவியும், பொள்ளாச்சியில் உள்ள மருத்துவமனைக்கு காரில் வந்தனர்.பொள்ளாச்சி - கோவை ரோட்டில், ஆச்சிப்பட்டி அருகே வந்த காரில், திடீரென முகப்பு பகுதி தீப்பிடித்து எரிந்தது. இதை கண்டதும் காரில் வந்த இருவரும் உடனே காரை நிறுத்தினர்.

இதுகுறித்து தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் துறைக்கு தகவல் கொடுத்தனர். உடனடியாக சம்பவ இடத்துக்கு சென்ற தீயணைப்புத்துறையினர் காரில் எரிந்த தீயை அனைத்தனர். கோவை தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து அதிகமுள்ள நேரத்தில் ஏற்பட்ட இச்சம்பவத்தால், பரபரப்பு ஏற்பட்டது.

Advertisement