மாரியம்மன் கோவில் கும்பாபிஷேகம்


நாமக்கல்: நாமக்கல்-துறையூர் சாலை, என்.கொசவம்பட்டி அடுத்த காமராஜர் நகரில், விநாயகர், மகா மாரியம்மன், மதுரைவீரன் மற்றும் பரிவார தெய்வங்களின் கோவில் அமைந்துள்ளது. தற்போது திருப்பணிகள் நடந்து முடிந்து, நேற்று கும்பாபிஷேகம் நடந்தது. கடந்த, டிச., 26ல் கணபதி, சுதர்சன மற்றும் நவக்கிரஹ ஹோமங்களுடன் விழா துவங்கியது. காவிரி ஆற்றில் இருந்து தீர்த்தம் கொண்டுவரப்பட்டது. 27ம் தேதி, வாஸ்து சாந்தி, காப்பு கட்டுதல், முதற்கால யாக வேள்வியும், அஸ்டபந்தனம் சாத்துதல் நடந்தது.


நேற்று காலை, 7:00 மணிக்கு, இரண்டாம் கால யாக பூஜையும், கடம்புறப்பாடும் நடந்தது. தொடர்ந்து, 9:00 மணிக்கு சிவாச்சாரியார்கள் கோபுர கலசத்திற்கு புனிதநீர் ஊற்றி
கும்பாபிஷேகம் நடத்தி வைத்தனர். சுற்று வட்டாரத்தை சேர்ந்த ஏராளமான பக்தர்கள், கோபுர தரிசனம் செய்தனர். அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது.

Advertisement