ஜனவரி மாத ஜிஎஸ்டி வசூல் ரூ.1.93 லட்சம் கோடி
புதுடில்லி: கடந்த ஜனவரி மாதம் நாட்டின் மொத்த ஜிஎஸ்டி 1.93 லட்சம் கோடி ரூபாய் வசூல் ஆகியுள்ளதாக மத்திய நிதியமைச்சகம் தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக மத்திய அரசு வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளதாவது: கடந்த ஜனவரி மாதம் ரூ.1 லட்சத்து 93 ஆயிரத்து 384 கோடி ஜிஎஸ்டி வசூல் ஆகியுள்ளது. இது, முந்தைய ஆண்டு ஜனவரி மாதத்தை காட்டிலும் 6.2 சதவீதம் அதிகம்.
அதில்,
* சிஜிஎஸ்டி- ரூ. 38,792 கோடி,
* எஸ்ஜிஎஸ்டி- ரூ. 47,817 கோடி,
* ஐஜிஎஸ்டி- ரூ.1,06,775 கோடி வசூல் ஆகியுள்ளது.
மாநில அளவில் ஒப்பிடும்போது, ஹரியானா 27 சதவீதமும், மஹாராஷ்டிரா 15 சதவீதமும், குஜராத் 13 சதவீதமும், இமாச்சல் 18 சதவீதமும், பஞ்சாப் 12 சதவீதமும், தமிழகம் 5 சதவீதமும், கர்நாடகா 7 சதவீதமும் ஜிஎஸ்டி வரி வசூல் அதிகரித்துள்ளது. இவ்வாறு அதில் தெரிவிக்கபட்டு உள்ளது.
முந்தைய மாத ஜிஎஸ்டி வசூல் விவரம்
* டிசம்பர் மாதம் (2025) - ரூ.1.75 லட்சம் கோடி
* நவம்பர் மாதம் (2025) - ரூ.1.70 லட்சம் கோடி
* அக்டோபர் மாதம் (2025) - ரூ.1.96 லட்சம் கோடி
* செப்டம்பர் மாதம் (2025) - ரூ.1.89 லட்சம் கோடி
* ஆகஸ்ட் மாதம் (2025) - ரூ.1.86 லட்சம் கோடி
* ஜூலை மாதம் (2025) - ரூ.1.96 லட்சம் கோடி
* ஜூன் மாதம் (2025)- ரூ.1.84 லட்சம் கோடி
அனைத்து வியாபார பெருமக்களும், நேர்மையான ஜிஎஸ்டி கட்ட ஆரம்பித்தால், நாட்டின் முக்கிய முன்னேற்றம் விரைவாக இருக்கும் அல்லவா.? பெரும்பாலான கடைகளில் கேஷ் அண்ட் கேரி தான், ரசீது வேண்டுமா ஜிஎஸ்டி கட்டனும், இல்ல அது இல்லாமல் பெரும்பாலான வாங்கலாம் என போக்கே அதிகமாக இருக்கிறது.மேலும்
-
பார்லிமென்டில் இன்று ஜனாதிபதி உரை மீதான விவாதம்; பிப்ரவரி 4ல் பிரதமர் மோடி உரை
-
வங்கதேசத்தில் 12ம் தேதி பொதுத்தேர்தல்; இந்தியாவுக்கு அழைப்பு
-
மாரத்தானில் சாதிக்கும் அரண்மனை நகரத்து பெண்
-
உக்ரைனில் பஸ் மீது ரஷ்யா டிரோன் தாக்குதல்; 15 பேர் பலி
-
நாட்டின் பாதுகாப்பில் சமரசம் செய்ய முடியாது; பாதுகாப்பு துறைக்கு முன்னுரிமை குறித்து நிர்மலா சீதாராமன்
-
ஈரானுடன் ஒப்பந்தம்; டிரம்ப் நம்பிக்கை