ஹோம் அலோன் படத்தில் அம்மாவாக நடித்த பிரபல ஹாலிவுட் நடிகை கேத்தரின் ஓஹாரா காலமானார்!
நமது நிருபர்
பிரபல ஹாலிவுட் நடிகை கேத்தரின் ஓஹாரா உடல் நலக்குறைவு காரணமாக ஜனவரி 30ம் தேதி காலமானார். அவருக்கு வயது 71.
அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் மாகாணத்தில், பிரபல ஹாலிவுட் நடிகை கேத்தரின் ஓஹாரா கணவர் போ வெல்ச், மகன்கள் மேத்யூ வெல்ச் (32), லூக் வெல்ச் (28) ஆகியோருடன் வசித்து வந்தார். இவருக்கு திடீரென உடல் நலக்குறைவு ஏற்பட்டது. பின்னர் அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கே டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தும் பலன் அளிக்காமல், கடந்த ஜனவரி 30ம் தேதி உயிரிழந்தார்.
இவரது மறைவுக்கு பல்வேறு தரப்பினர் இரங்கல் தெரிவித்தனர். ஆஃப்டர் ஹவர்ஸ் (1985), ஹார்ட் பர்ன் (1986), பீட்டில்ஜூஸ் (1988), ஹோம் அலோன் (1990), ஹோம் அலோன் 2 (1992), வெயிட்டிங் பார் கஃப்மன் (1996) உள்பட பல படங்களில் கேத்தரின் ஓஹாரா நடித்துள்ளார்.
அம்மா கதாபாத்திரம்
இவருக்கு தனி ரசிகர் பட்டாளமே இருக்கிறது. ஹோம் அலோன்' படத்தில் இவர் நடித்த அம்மா கதாபாத்திரம் பல்வேறு தரப்பினர் மத்தியில் மிகுந்த பாராட்ட பெற்றது. இந்த கதாபாத்திரம் தான் இவரது செல்வாக்கு உயர முக்கியமாக அமைந்தது. இவர் நடிகை மட்டுமல்ல, நகைச்சுவை எழுத்தாளரும் ஆவார். புகழ்பெற்ற பிரைம் டைம் எம்மி மற்றும் கோல்டன் விருதுகளை வென்றுள்ளார்.
மேலும்
-
இந்த முறை பிராந்திய போராக இருக்கும்: அமெரிக்காவுக்கு ஈரான் எச்சரிக்கை
-
சொத்து விபரங்களை சமர்ப்பிக்காத 68,000 அரசு ஊழியர்களின் சம்பளம் நிறுத்தம்; உ.பி. அரசு அதிரடி
-
தி.மு.க., தொகுதி பங்கீடு குழுவுக்காக காங்., காத்திருப்பு; முதலில் பேச அழைக்கும் என எதிர்பார்ப்பு
-
மத்திய பட்ஜெட்டில் கேரளா மிஸ்ஸிங்; சசிதரூர் விமர்சனம்
-
நடுத்தர வர்க்கத்தினருக்கு ஏமாற்றமில்லை; அமைச்சர் பியுஷ் கோயல்
-
கம்போடியா... காரைக்கால் அம்மையார்... கமல்... நான்!