யுஜிசி விதிகளில் திருத்தம்: முதல்வர் ஸ்டாலின் வரவேற்பு
சென்னை: யுஜிசி புதிய விதிகளில் சாதியப் பாகுபாட்டை ஒழிப்பதும், அச்சட்டக்கத்துக்குள் இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கும் பாதுகாப்பு வழங்கப்பட்டிருப்பதும் ஆதரிக்கத்தக்கது என முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
அவரது அறிக்கை: UGC (உயர்கல்வி நிறுவனங்களில் சமத்துவ ஊக்குவிப்பு) விதிகள், 2026 தாமதமான நடவடிக்கை என்றாலும், பாகுபாட்டிலும், நிறுவனங்களின் அக்கறையின்மையிலும் தோய்ந்துபோன உயர்கல்வி அமைப்பினைச் சீர்ப்படுத்துவதை நோக்கிய வரவேற்கத்தக்க நகர்வாகும். மத்திய அளவில் பாஜ ஆட்சிக்கு வந்ததில் இருந்து, இந்திய உயர்கல்வி நிறுவனங்களில் மாணவர் தற்கொலைகள், குறிப்பாகப் பட்டியல், பழங்குடியின மாணவர்களின் தற்கொலைகள் அதிகரித்திருப்பது கண்கூடு.
மேலும், தென்னிந்திய மாநிலங்கள் காஷ்மீர், சிறுபான்மைச் சமூகங்களைச் சேர்ந்த மாணவர்களைக் குறிவைத்து மீண்டும் மீண்டும் தாக்குதல் சம்பவங்களும் தொல்லைக்குள்ளாக்குவதும் நடத்தப்பட்டு வருகின்றன. இத்தகைய சூழலில், சமத்துவப் பாதுகாப்பு நடவடிக்கைகள் என்பவை தவிர்க்க முடியாத கட்டாயமாகும். அதில் இருவேறு கருத்துக்கு இடமிருக்க முடியாது.
யுஜிசி புதிய விதிகளில் சாதியப் பாகுபாட்டை ஒழிப்பதும், அச்சட்டக்கத்துக்குள் இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கும் பாதுகாப்பு வழங்கப்பட்டிருப்பதும் ஆதரிக்கத்தக்கது. மண்டல் குழு பரிந்துரைகளின் அடிப்படையில் இட ஒதுக்கீட்டை அமல்படுத்தியபோது போராட்டம் நடத்திய அதே பிற்போக்கு மனநிலையுடன்தான் யுஜிசி விதிகளுக்கு எதிரான தற்போதைய போராட்டங்களும் அமைந்துள்ளன. இத்தகைய அழுத்தங்களுக்கு ஆட்பட்டு, மத்திய அரசு இந்தப் புதிய விதிகளையோ அல்லது அவற்றின் மைய நோக்கங்களையோ நீர்த்துப் போகச் செய்யக் கூடாது.
ரோகித் வெமுலா அவர்களின் தற்கொலை போன்ற வழக்குகளில், துணைவேந்தர்கள் மீதே குற்றம்சாட்டப்பட்டிருந்த நிலையில், யுஜிசி புதிய விதிகளின்படி உயர்கல்வி நிறுவனத் தலைமைப் பொறுப்பில் இருப்பவரின் தலைமையிலேயே சமத்துவக் குழுக்களை அமைத்தால் அவை எப்படி சுதந்திரமாகச் செயல்பட முடியும் என்ற கேள்வி எழுகிறது. அதுவும் பல உயர்கல்வி நிறுவனங்களின் தலைமைப் பொறுப்பில் ஆர்.எஸ்.எஸ். ஆதரவாளர்கள் நியமிக்கப்பட்டிருக்கும்போது இக்கேள்வி மேலும் வலுவடைகிறது.
மாணவர்களின் தற்கொலைகளைத் தடுப்பது, பாகுபாடுகளை முடிவுக்குக் கொண்டு வருவது, பிற்படுத்தப்பட்ட சமூகங்களைச் சேர்ந்த மாணவர்களின் இடைநிற்றலைக் குறைப்பது ஆகியவற்றில் மத்திய பாஜ அரசு உண்மையாகவே தீவிரமாக இருந்தால், இந்த விதிகளை மேலும் வலுப்படுத்துவது மட்டுமில்லாமல், அதில் உள்ள அமைப்புரீதியான குறைகளைக் களையும் வகையில் திருத்தியமைக்க வேண்டும். முறையாக நடவடிக்கைகளை எடுக்கும் வகையில் செயல்படுத்திட வேண்டும். இவ்வாறு முதல்வர் ஸ்டாலின் கூறியுள்ளார்.
வாசகர் கருத்து (14)
sankaranarayanan - Chennai-Tamilnadu,இந்தியா
29 ஜன,2026 - 22:28 Report Abuse
யு. ஜி. சி. ஐ குறை கூறும் திராவிட மாடல் முதல்வரே, நீங்கள் ஆட்சி செய்யும்போது அனைவரும் அர்ச்சகர் ஆகலாம் என்று சட்டம் கொண்டுவந்திர்களே அப்போது தமிழகத்தில் அனைவரும் முதல்வர் ஆகலாம் என்ற சட்டம் ஏன் கொண்டுவரவில்லை அப்பனுக்கு பிறகு, புள்ளையாண்டானும் அதன் பிறகு பேரனும் அவனுக்கு பிறகு கொள்ளுபேரனும்தான் தமிழ் நாட்டை ஆள வேண்டுமா இதர மக்கள் ஆளக்கடாதா முதலில் அதைமாற்றுங்கள் இதுதான் பெரியார் வகுத்த வழியா 0
0
Reply
sengalipuram - ,இந்தியா
29 ஜன,2026 - 17:47 Report Abuse
முற்படுத்தப்பட்டோர்க்கு இழைக்கும் துரோகம் நடைமுறைபடுத்தப்பட்டுள்ளது . அதனால் தான் அப்பா அதை ஆதரித்து வரேவேற்றுள்ளார் . 0
0
Reply
sankar - Nellai,இந்தியா
29 ஜன,2026 - 15:00 Report Abuse
தெரியாமலேயே ஏதாவது உளறிகொட்டவேண்டியது 0
0
Reply
sankar - Nellai,இந்தியா
29 ஜன,2026 - 13:59 Report Abuse
ஓபிசி, எம்பிசி - போன்றவற்றை அகில இந்திய அளவில் நடைமுறை படுத்தியது பிஜேபி ஆட்சி - காங்கிரசுக்கு இந்த அளவுக்கு தெம்பு இல்லை - இப்போது இந்த நடைமுரைகள் - இதற்கு பிஜேபியை பாராட்ட மனம் இல்லை - துரோகம் செய்த காங்கிரசுக்கு வால்பிடிக்கிறீர்கள் - வெட்கப்படவேண்டும் 0
0
Reply
sankar - Nellai,இந்தியா
29 ஜன,2026 - 13:52 Report Abuse
மைய அரசு எப்போதும் நன்மையே செய்யும் - 0
0
Reply
Kannan Chandran - Manama,இந்தியா
29 ஜன,2026 - 13:33 Report Abuse
டாஸ்மாக்கை பெருக்குனோமா, தகப்பனாருக்கு சிலை வச்சோமா, இன்ப-ஐயா வாழ்க வளர்க கத்த விட்டோமா, மீடியாக்களை கூவ விட்டோமானு இருந்தா உடன்பிறப்புகளுக்கு புரியும், அதை விட்டுட்டு எபிசிடி, யுஜிசி-ன்னா அவர்களுக்கு என்ன புரியும் பக்குன்னு இருக்காதா?.. 0
0
Reply
Kannan Chandran - Manama,இந்தியா
29 ஜன,2026 - 13:24 Report Abuse
இவரு UCC -ன்னு புரிஞ்சிக்கிட்டார் போல.. 0
0
Reply
Ramesh Sargam - Back in Bengaluru, India.,இந்தியா
29 ஜன,2026 - 13:00 Report Abuse
திமுகவில் வாரிசு முறை திருத்தம் செய்யப்பட்டு, வாரிசு அல்லாதவர்களுக்கும் அரசில், கட்சியில் பெரிய பதவிகள் கொடுக்கப்படவேண்டும். அது உங்களால் முடியுமா வாரிசு முதல்வரே? 0
0
Reply
srinivasan - chaennal,இந்தியா
29 ஜன,2026 - 12:23 Report Abuse
திமுக ஆதரிக்கிறது என்றால் ஏதோ தப்பாக தெரிகிறதே. 0
0
Reply
R.MURALIKRISHNAN - COIMBATORE,இந்தியா
29 ஜன,2026 - 11:59 Report Abuse
முதலில் உள்ளூரில் நடக்கும் கொலை கொள்ளை பாலியல் பலாத்காரத்திற்கு பதில் சொல் சர்வாதிகாரி. 23 ஆம் புலிகேசியை விட மோசமான ஆட்சியப்பா உன்னுடையது. திருட்டு திராவிட மாடல் 0
0
Reply
மேலும் 4 கருத்துக்கள்...
மேலும்
-
போலி தொழுநோய் சான்றிதழ் வழங்கி ஆசிரியரான 27 பேர் மீது விசாரணை
-
ஈரானின் புரட்சிகர காவல் படை ஒரு பயங்கரவாத அமைப்பு: ஐரோப்பிய யூனியன் அறிவிப்பு
-
விற்பனை கூடத்தில் கொப்பரை ஏலம்: கிலோ ரூ. 201க்கு விற்பனை
-
காரில் தீப்பிடித்து எரிந்ததால் கோவை ரோட்டில் பரபரப்பு
-
கணக்கெடுப்பு நடத்த மா.கம்யூ.,கோரிக்கை
-
வண்ண ஓவியங்களால் மிளிரும் புது பஸ் ஸ்டாண்ட் சுவர்கள்
Advertisement
Advertisement