பாராமதி விமான விபத்து; 3 பேர் அடங்கிய விசாரணை குழுவை அமைத்தது மத்திய அரசு
புதுடில்லி: மஹாராஷ்டிரா துணை முதல்வர் அஜித் குமார் சென்ற விமானம் விபத்துக்குள்ளானது குறித்து விசாரிக்க 3 பேர் அடங்கிய குழுவை மத்திய சிவில் விமானப் போக்குவரத்துத்துறை அமைச்சகம் அமைத்துள்ளது. முழுமையான, வெளிப்படையான விசாரணை நடத்தப்படும் என்றும் தெரிவித்துள்ளது.
மஹாராஷ்டிரா துணை முதல்வர் அஜித் பவார் உள்ளிட்ட 5 பேர் சென்ற விமானம் தரையிறங்கும் போது ஏற்பட்ட விபத்தில் சிக்கியது. இதில், விமானத்தில் ஏற்பட்ட தீவிபத்தில் 5 பேரும் உடல் கருகி உயிரிழந்தனர். அவரது உடல் இன்று பாராமதியில் தகனம் செய்யப்பட்டது.
இதனிடையே, விமான விபத்து நடந்த இடத்தில் விமானப் போக்குவரத்துத்துறை அதிகாரிகள் இன்று நேரில் ஆய்வு செய்தனர். அப்போது, விமானத்தின் கருப்புப்பெட்டி மீட்கப்பட்டது. அதனை ஆய்வு செய்வதற்காக அதிகாரிகள் அனுப்பி வைத்துள்ளனர். அந்தக் கருப்புப் பெட்டியில் விமானிகள் கடைசியாக பேசிய உரையாடல்கள் குறித்த தகவல்கள் வெளியாகி வந்தன.
இதனிடையே, பாராமதி விமான விபத்து குறித்து சிவில் விமானப் போக்குவரத்துத்துறை அமைச்சகம் அறிக்கை வெளியிட்டுள்ளது.
அதில் கூறியிருப்பதாவது; பாராமதி அருகே நடந்த விமான விபத்து மிகவும் துரதிர்ஷ்டவசமானது. விபத்து ஏற்பட்டதாக கிடைத்த தகவலைத் தொடர்ந்து, தேவையான அனைத்து மீட்பு பணிகளும் மேற்கொள்ளப்பட்டன. அதேபோல, விசாரணை அமைப்புகளும் தங்களின் விசாரணையை உடனடியாக துவங்கின. முழுமையான, வெளிப்படையான விசாரணை நடத்த வேண்டும் என்பதே நோக்கமாகும்.
விமான விபத்து விசாரணை அமைப்பின் தலைமை இயக்குநர் நேற்றே விபத்து இடத்திற்கு நேரில் சென்று ஆய்வு நடத்தினார். விமான விபத்து விசாரணை அமைப்பின் 3 அதிகாரிகள் கொண்ட குழுவும், சிவில் விமானப் போக்குவரத்து இயக்குநரக அதிகாரிகள் குழுவும் விபத்து நடந்த இடத்தில் ஆய்வு மேற்கொண்டன.
விபத்துக்குள்ளான அந்த விமானத்தின் கருப்புப் பெட்டி மீட்கப்பட்டுள்ளது. நடைமுறைகள், வழிகாட்டுதல்களின் அடிப்படையில், ஒரு குறிப்பிட்ட காலக்கெடுவிற்குள் இந்த விசாரணையை முடிக்கப்படும், இவ்வாறு குறிப்பிட்டுள்ளது.
@block_B@
பாராமதி விமான நிலையத்திற்கு இந்திய விமானப்படையைச் சேர்ந்த குழு ஒன்று அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இந்தக் குழு அங்கு அடிப்படை விமானப் போக்குவரத்துக் கட்டுப்பாடு மற்றும் வானிலை ஆய்வு சேவைகளை வழங்கி வருகிறது.block_B
இந்த Black Box கிடைச்சிதா?
மூணு நாள் முன்னாடி எங்கே டீ குடிச்சாங்க. பக்கோடா சாப்புட்டாங்கன்னு ஆரம்பிக்கலாம். ஒரு மூணு வருசம் ஓட்டலாம். விபத்தே நடக்கலைன்னு முடிச்சிரலாம்.மேலும்
-
வங்கதேசத்தில் இருந்து இடம்பெயர்ந்த 99 ஹிந்து குடும்பங்களுக்கு மறுவாழ்வு
-
மகாத்மாவின் சுதேசி கொள்கையே தற்சார்பு இந்தியாவின் அடிப்படை தூண்; பிரதமர் மோடி
-
விலை மதிப்பில்லா அறிவாற்றலை மலிவாக ஏற்றுமதி செய்யும் நிலை; ஸ்ரீதர் வேம்பு வேதனை
-
போலி தொழுநோய் சான்றிதழ் வழங்கி ஆசிரியரான 27 பேர் மீது விசாரணை
-
ஈரானின் புரட்சிகர காவல் படை ஒரு பயங்கரவாத அமைப்பு: ஐரோப்பிய யூனியன் அறிவிப்பு
-
விற்பனை கூடத்தில் கொப்பரை ஏலம்: கிலோ ரூ. 201க்கு விற்பனை