9 ஹெக்டேரில் டிராகன் ப்ரூட் சாகுபடி: கலெக்டர் தகவல்

கரூர்: கரூர் மாவட்டத்தில், 9 ஹெக்டேர் பரப்பளவில் டிராகன் ப்ரூட் பயிரிடப்பட்டுள்ளது என, கரூர் கலெக்டர் தங்கவேல் தெரிவித்தார்.


குளித்தலை அருகில், இரணியமங்கலத்தில் தோட்டக்கலை துறை சார்பாக, விவசாயிகள் மானியம் பெற்று டிராகன் ப்ரூட் சாகுபடியை, கலெக்டர் தங்கவேல் ஆய்வு செய்தார்.அப்போது, அவர் கூறியதாவது:
தோட்டக்கலை துறை சார்பில் தேசிய வேளாண்மை வளர்ச்சித் திட்டத்தின் கீழ், டிராகன் ப்ரூட் சாகுபடி செய்யப்படுகிறது. இப்-பயிர் சாகுபடிக்கு 1 ஹெக்டேருக்கு, 96,000 ரூபாய் மானியமாக வழங்கப்பட்டு வந்த நிலையில், 2025--26ம் நிதியாண்டு முதல், 1 ஹெக்டேருக்கு, 1.62 லட்சம் மானியமாக வழங்கப்படுகிறது. டிராகன் ப்ரூட் குறைந்த பராமரிப்பில் அதிக லாபம் தரும் பயி-ராக உள்ளது. காலநிலை டிராகன் ப்ரூட் சாகுபடிக்கு மிகவும் ஏற்றது. வடிகால் வசதியுள்ள செம்மண் அல்லது மணல் கலந்த மண் மிகவும் சிறந்தது. வெப்பத்தின் அளவு, 20 முதல், 35 செல்சியஸ் வரை வளர்ச்சி சிறப்பாக இருக்கும்.
இது கொடி வகை என்பதால், படர்வதற்கு தாங்கு துாண்கள் அவ-சியம். 6 அடி உயரமுள்ள சிமென்ட் துாண்களை, 2 அடி ஆழத்தில் ஊன்ற வேண்டும். துாணின் உச்சியில் ஒரு வட்ட வடி-விலான சிமென்ட் வளையம் பொருத்தப்பட்டு, ஒரு துாணுக்கும் அடுத்த துாணுக்கும் 8 முதல் 10 அடி இடைவெளி இருக்க வேண்டும்.
துாணை சுற்றி, 4 செடிகள் நடலாம். நிலம் காய்ந்திருக்கும் போது மட்டும் நீர் பாய்ச்சினால் போதும். தொழு உரம், ஆட்டு எரு போன்ற இயற்கை உரங்களை, ஆண்டுக்கு இரண்டு முறை இடலாம். வளர்ச்சி காலத்தில் சிறிதளவு பொட்டாஷ் மற்றும் பாஸ்பரஸ் உரங்கள் தேவைப்படும். நடப்பட்ட, 12 முதல், 15 மாதங்களில் பலன் தரத் தொடங்கும்.
மே மாதம் தொடங்கி அக்டோபர் வரை பூக்கும். ஒரு செடி, 20 முதல் 25 ஆண்டுகள் வரை பலன் தரும். ஒரு ஏக்கருக்கு ஆண்டுக்கு சராசரியாக 4 முதல் 5 டன் வரை மகசூல் எதிர்பார்க்-கலாம்.மாவட்டத்தில், 9 ஹெக்டேர் பரப்பளவில் தோகைமலை, குளித்தலை, அரவக்குறிச்சி மற்றும் கடவூர் வட்டாரங்களில் பயிரி-டப்பட்டுள்ளது.
இவ்வாறு, அவர், கூறினார்.
ஆய்வின் போது தோட்டக்கலைத் துறை துணை இயக்குனர் தியா-கராஜன், குளித்தலை உதவி இயக்குனர் ஐஸ்வர்யா உள்பட பலர் பங்கேற்றனர்.

Advertisement