நாட்டு நலப்பணி திட்ட முகாம் நிறைவு
அரவக்குறிச்சி: அரவக்குறிச்சி, அரசு கலை மற்றும் அறிவியல் கல்லுாரி மற்றும் பாரதிதாசன் பல்கலைக்கழகம் இணைந்து நடத்திய, நாட்டு நலப்-பணி திட்ட சிறப்பு முகாம், வெஞ்சமாங்கூடலுார் மேற்கு ஊராட்சி பகுதியில் நடைபெற்றது.
நிறைவு விழாவிற்கு, கரூர் அரசு கல்லுாரி தொல்லியல் துறை பேராசிரியர் செந்தில்குமார், வழக்கறிஞர் முகமது அலி, பொரு-ளாதார குற்றப்பிரிவு ஆய்வாளர் நிஷா, வெஞ்சமாங்கூடலுார் ஊராட்சி செயலாளர் கலையரசன், கணினி உதவியாளர் சரவண-குமார் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். கல்லுாரி முதல்வர் காளீஸ்வரி தலைமை வகித்தார்.
கடந்த 7 நாட்களாக நடந்த சேவை முகாமில், 50 நாட்டு நலப்-பணி திட்ட மாணவ, மாணவியர் பங்கேற்று உழவாரப்பணி, காசநோய் மற்றும் புற்றுநோய் குறித்த விழிப்புணர்வு, வாக்காளர் விழிப்புணர்வு பேரணி, மருத்துவ முகாம், மரம் நடுதல் போன்ற பணிகளில் ஈடுபட்டனர்.
மேலும் அரசு சார்ந்த இடங்கள், கோவில், கிராம நிர்வாக அலுவ-லகம், குழந்தைகள் நல மையம் ஆகிய பகுதிகளை சுற்றியுள்ள இடங்களை துாய்மைப்படுத்தியும், நீர்நிலைகள் மற்றும் அடர்ந்த புல்வெளிகள், முள்வெளிகளை அகற்றியும், கருவேல மரங்கள் உள்ளிட்ட தீங்கு விளைவிக்கும் மரங்களை அகற்றி கிராமத்திற்கு பயனுள்ள சேவைகளை மேற்கொண்டனர்.
மேலும்
-
போலி தொழுநோய் சான்றிதழ் வழங்கி ஆசிரியரான 27 பேர் மீது விசாரணை
-
ஈரானின் புரட்சிகர காவல் படை ஒரு பயங்கரவாத அமைப்பு: ஐரோப்பிய யூனியன் அறிவிப்பு
-
விற்பனை கூடத்தில் கொப்பரை ஏலம்: கிலோ ரூ. 201க்கு விற்பனை
-
காரில் தீப்பிடித்து எரிந்ததால் கோவை ரோட்டில் பரபரப்பு
-
கணக்கெடுப்பு நடத்த மா.கம்யூ.,கோரிக்கை
-
வண்ண ஓவியங்களால் மிளிரும் புது பஸ் ஸ்டாண்ட் சுவர்கள்